தமிழக சட்டசபையில் இன்று! இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை! சேகர்பாபு Vs ரமேஷ் மோதல்?
சென்னை: தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத் துறை, சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. இதில் பொது, வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் முறையே ஆகஸ்ட் 5, 6 ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது.
அது போல் ஆகஸ்ட் 7ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முதல் நாளில் வருவாய் பேரிடர், மருத்துவத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அடுத்த நாள் பொதுப் பணித் துறை, பிறகு நீர்வளத் துறை, நேற்றைய தினம் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் சட்டத் துறை, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை அளிக்கிறார்கள். கடந்த ஆட்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக சேகர் பாபுவும் சட்டத் துறை அமைச்சராக ரகுபதியும் இருந்தனர்.
ஏற்கெனவே ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு வந்த சேகர்பாபுவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தின் முக்கிய கோயில்களில் விஐபிக்கள் வருவதென்றால் ஒரு நாள் முன்னரே கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்து அறநிலையத் துறையில் என்னென்ன நடந்தது என்பது குறித்து சேகர்பாபுவுடன் ரமேஷ் மோதுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
