தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால்.. பாஜகவிற்கு திமுக ஆதரவு தருமா? ஸ்டாலின் முடிவு என்ன? பின்னணி
சென்னை: லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் நெருங்கும் நிலையில் திமுகவில் மிக முக்கியமான ஆலோசனை ஒன்று நடந்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை இருந்தாலும், திமுகவின் "வெகு சில" சீனியர் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் திமுக தலைமையிடம் முக்கியமான சில விஷயங்களை விவாதித்திருக்கிறார்கள்.
அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போய், திமுகவின் ஆதரவு இருந்தால் மீண்டும் மோடி பிரதமர் ஆக முடியும் என்ற நிலை உருவாகும்பட்சத்தில், திமுகவின் ஆதரவைக்கேட்டு பாஜக தலைமை நம்மை அனுகினால் நாம் பாஜக கேபினெட்டில் இணையலாம். தவிர்க்ககூடாது என சீனியர்கள் வலியுறுத்தியிருக்கிறார்களாம்.

பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 இடங்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
பாஜக இலக்கு: 370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
சிக்கல் மேல் சிக்கல்: அதே சமயம் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இன்னும் சில கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றன . இன்னும் சிலர் என்டிஏ கூட்டணிக்கே கூட மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் திமுக போன்ற கட்சிகளின் தயவு ரிசல்ட்டுக்கு பின் பாஜகவிற்கு தேவை.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக அமைச்சரவையில் நாம் சேர்ந்தால், என்ன காரணம் சொல்லி கட்சியினரையும் மக்களையும் சமாதானப்படுத்த முடியும் ? எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளவது ? என்று திமுகவின் சீனியர்கள் ஆலோசனையில் இறங்கி உள்ளனராம். அப்போது, சீனியர் எம்.பி.க்கள், இந்துத்துவா அரசியலிலும், பாஜக ஆட்சியிலும் தமிழர்கள், ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர், தலித்துகள் பாதிக்கப்படாதவாறு திமுக பார்த்துக் கொள்ளும் என சொல்லலாம்.
பாதுகாப்பு: அந்த பாதுகாப்பிற்காகவும், இந்தியாவை பாதுகாக்கவுமே பாஜக அமைச்சரவையில், திமுக இணைகிறது என்றும் காரணம் சொல்லலாம் என்பது உள்ளிட்ட பல சாதுர்யமான காரணங்களை அடுக்கியிருக்கிறார்களாம் அந்த சீனியர் எம்.பி.க்கள். கட்சி தலைமையும், பாஜக ஆதரவு கேட்டால் பரிசீலிக்கலாம் ; ஆர்.எஸ்.எஸ். தலையீடு இல்லையெனில் பாஜக ஒன்றும் தீண்டத்தாகத கட்சி இல்லையே என்று யோசிக்கிறதாம்.
ஆனால் திமுகவின் பெரும்பான்மை லீடர்கள், தலைமை என்று எல்லோரும் பாஜக வேண்டாம். அதை கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார்களாம். ஸ்டாலினும் பாஜக கூட்டணிக்கு சான்சே இல்லை என்றுதான் இருக்கிறாராம்.
அதனால், ஜூன் 4-ந்தேதி தேர்தல் ரிசல்ட்டின் முடிவுகளைப் பொறுத்து தமிழகத்தில் கூட்டணி கட்சிகளிடையே கூட மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications