மூடப்படும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்? மார்க்கெட்டும் காலி.. அங்கே வரப்போகும் பெரிய திட்டம் இதுதான்!
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் இரண்டும் மூடப்பட்டு உள்ளது. இவை இருக்கும் இடத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் உள்ள இடத்தில் என்ன திட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிளாப்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னைக்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் கடந்த வாரத்தில் இருந்து அனுமதிக்கப்படுவது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டுமே.. கோயம்பேடு, சின்னமலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக ஈசிஆர் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இவை மட்டுமே கோயம்பேடில் இருந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி செங்கல்பட்டு, பெருங்களத்தூர் ரூட் எடுக்கும் வாகனங்கள் எல்லாம் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள, இறங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
எப்படி இயங்கும்: கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.
அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்; ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் உள்ள இடத்தில் என்ன திட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இங்கே சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் 7 ஏக்கர் பூங்கா அமைக்க ஆணையம் (சிஎம்டிஏ) டெண்டர் எடுத்துள்ளது. மிகப்பெரிய பூங்காவை இங்கே அமைக்க உள்ளனர். பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் பூங்கா போல பிரம்மாண்டமாக பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications