Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அட்டாக்.. மேடையில் ஏறப்போகும் "அந்த" 2 பேர்.. மோடியின் சென்னை பயணம்.. பாஜகவின் பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையால் இன்று சென்னையில் முக்கியமான சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி 04.03.2024 அன்று மாலை 17.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What will PM Narendra Modi be doing in his travel to Tamil Nadu today

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது அவசியம்.

அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார்.

பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார்

மோடி பயணம்: இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள அரசியல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை முறையாக இங்கே மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கூட்டணி தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றும் வாய்ப்புகள் உள்ளன.

டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உட்பட சிலர் மேடைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. இது போக ஜிகே வாசன், ஐஜேகே பாரிவேந்தர் ஆகியோரும் இந்த நிகழ்வில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் கூட்டணி தொடர்பான முக்கியமான விஷயங்களை நிகழ்ச்சி முடிந்த பின் மோடி அண்ணாமலையிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. திமுக அட்டாக்தான் இன்று மோடியின் பேச்சில் பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்.

2. கூட்டணி தலைவர்களை மேடை ஏற்றுவது பிரதானமாக இருக்கும்.

3. முக்கியமாக டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மேடைக்கு கொண்டு வர திட்டம் இருக்கலாம்.

4. அதிமுகவின் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி மோடி மீண்டும் உருக்கமாக பேச வாய்ப்பு உள்ளது.

5. தமிழ்நாட்டின் போதை பொருள் விவகாரம் தொடர்பாக மோடி ஸ்டேட்மென்ட் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.

மோடி கருத்து: தமிழ்நாடு பயணம் குறித்து பிரதமர் மோடி செய்த போஸ்டில், நான் நாளை, மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன்., என்று கூறியுள்ளார்.

பயண திட்டம்; இன்று மார்ச் 4 ஆம் தேதி, காலை 10:30 மணியளவில், தெலுங்கானாவின் அடிலாபாத்தில் 56,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ..

அதன்பின் விமானம் மூலம் தமிழ்நாடு வரும் மோடி பிற்பகல் 3:30 மணியளவில், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்திற்கு மோடி செல்கிறார். அதன்பின் விமானம் மூலம் மாலை சென்னை வரும் மோடி சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+