"கையில் தர மாட்டோம்.. ஆனா 27 மட்டும்தான்".. தைலாபுரத்துக்கு ஒரு தூது.. நடக்குமா நடக்காதா.. திக் திக்

பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது இன்று தெரிந்துவிடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடியார் தரப்பில் இருந்து, தைலாபுர தோட்டத்துக்கு நபர் ஒருவர் மூலம் தூது சென்றதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

பாமக இப்போது பயங்கரமான குழப்பத்தில் உள்ளது.. எதற்காக உள்ஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்வைத்து வருகிறாரோ தெரியவில்லை..

வழக்கமாக கூட்டணி, சீட் பேரம், இன்ன பிற விஷயங்கள்தான் இதுபோன்ற நேரங்களில் நடப்பது வழக்கம்.. ஆனால், இந்த முறை எல்லாமே தலைகீழாக மாறிவருகிறது.. இடஒதுக்கீடு விஷயத்தில் ராமதாஸ் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.. உறுதியாகவும் இருக்கிறார்.

 கூட்டணி

கூட்டணி

அதேசமயம், அதிமுக தரப்பில் கூட்டணி உறுதி செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. வரும் 31ம் தேதி அதாவது இன்றைய தினம் அந்த கட்சியின் நிர்வாக குழுக் கூட்டத்தில் விவாதித்து, முதல் வாரத்தில் பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி, கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக

பாமக

இது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே கூட்டணியை உறுதியை செய்ய, பாமக தரப்பில் 2 அமைச்சர்கள் மூலம் பேச்சு நடத்தப்பட்டது.. அப்போது 3 கண்டிஷன்களை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது.. அதை கேட்டு விட்டு போனவர்கள்தான், அதற்கு பிறகு மறுபடியும் தைலாபுரத்துக்கு வரவே இல்லை... பின்னர், பாமக தரப்பில் அடுத்தடுத்து 2 முறை பேசப்பட்டது.. ஆனால், அது இடஒதுக்கீடு விஷயமாக பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது.

 3வது அணியா?

3வது அணியா?

இதனால், அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா? அல்லது தனித்து போட்டியா? அல்லது 3வது அணியா? என்ற பல சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில்தான், மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கசிந்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடியார் தரப்பு, ராமதாஸ் தரப்பை நேரில் சந்தித்து பேசுவதற்காக 2 கண்டிஷன்களை சொல்லி அனுப்பியதாம்.

 27 தொகுதிகள்

27 தொகுதிகள்

அதன்படி, தேர்தலுக்கு முன்பு இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லை.. இது நீண்ட நிர்வாக நடைமுறைகளை உள்ளடக்கியது.. அதனால், ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் வேண்டுமானால் அதை செயல்படுத்துவோம்... ஒருவேளை இதற்கு சம்மதம் என்றால், பாமகவுக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும்...

 பூத் கமிட்டி

பூத் கமிட்டி

இரண்டாவது விஷயம், எம்பி தேர்தலுக்கு கொடுத்த மாதிரி தேர்தல் செலவுக்கான தொகையை, அந்தந்த கட்சிகளிடம் தர போவதில்லை.. ஏனென்றால், போன முறை கொடுக்கப்பட்ட பணம் முறையாக செலவழிக்கப்படவில்லை அதுவும் இல்லாமல் இது சட்டமன்ற தேர்தல் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் செலவை அதிமுகவே ஏற்று கொள்ளும்.. இதற்கெல்லாம் சம்மதமா என்று கேட்டு அந்நபரை அனுப்பி வைத்ததாம்.

 40 சீட்டுக்கள்

40 சீட்டுக்கள்

ஆனால், இதன் முடிவு என்ன? பாமக இதற்கு சம்மதிக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை.. அவர்கள் ஏற்கனவே 40 சீட்டுக்கு மேல் கேட்டு கொண்டுள்ள நிலையில், வெறும் 27 தொகுதிகளை ஏற்க பாமக முன்வருமா என்று தெரியவில்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் செலவை கையில் தரப்பட மாட்டாது என்பதை அக்கட்சி ஏற்குமா என்று தெரியவில்லை.. அதேபோல, இடஒதுக்கீடு கோரிதான் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.. ஆனால், ஆட்சி அமைந்ததும் அது பற்றி பரிசீலிக்கப்படுவதாக சொல்வதையும் பாமக ஏற்குமா என்று தெரியவில்லை.. இன்று நடக்கும் கூட்டத்தில் ஓரளவு முடிவு தெரிந்துவிடும்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+