முதல் கையெழுத்தே அதிரடி? இனி எடப்பாடி எடுக்கும் முடிவை யாரும் கட்டுப்படுத்த முடியாது! முக்கிய முடிவு
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அவர் இனி எடுக்கும் முடிவுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு, செயற்குழு தற்போது சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக செயற்குழுவில் தற்போது 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது, இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பொதுக்குழு
இதையடுத்து இதே தீர்மானங்கள் தற்போது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீர்மானம்
இந்த தீர்மானத்தின்படி 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தொண்டர்கள் தேர்வு செய்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். இந்த தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிட முடியும். ஆனால் 10 மாவட்ட செயலாளர்கள் குறைந்தபட்சம் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

10 மாவட்ட செயலாளர்கள்
10 மாவட்ட செயலாளர்கள் போட்டியிட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால் ஓ பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது சந்தேகம் ஆகியுள்ளது. ஏனென்றால் ஓ பன்னீர்செல்வத்திற்கு 3 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலிலேயே போட்டியிட முடியாது. இன்று பொருளாளராக ஓ பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழுவிற்கு வரவில்லை.

விதி மீறல்
இதனால் கட்சி விதிகளை மீறியதாக கூறி ஓ பன்னீர்செல்வம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதோடு தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். இதனால் அவரின் முடிவுகளுக்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியது இல்லை. எந்த நிர்வாகிகளிடமும் அனுமதி கேட்காமல் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்க முடியும். அவர் முடிவை யாரும் கைப்பற்ற முடியாத காரணத்தால் எடப்பாடி துணிச்சலாக முடிவுகளை எடுக்க முடியும்.

முடிவு என்ன?
அதன்படி எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்தே கட்சியில் சில புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முடிவாக இருக்கும் என்கிறார்கள். அதாவது புதிய பொருளாளர், தலைமை குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கான நிர்வாகிகளை புதிதாக எடப்பாடி நியமிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான கையெழுத்து போட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதோடு கட்சி விதிகளை மீறியதாக கூறி ஓ பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடுத்ததாக கூறி ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி ஆக்சன் எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்கான கையெழுத்தையும் அவர் போட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications