12 டாப் தலைகள்.. ஸ்டாலின் எடுத்த முக்கிய லிஸ்ட்.. உள்ளே வரப்போகும் 2 புதிய அமைச்சர்கள்? பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட உள்ளார். இவருடன் புதிய அமைச்சர்கள் யாரேனும் பதவி ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில் சில முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்தன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு அமைச்சரவை ஒருவழியாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பதவி ஏற்று 19 மாதங்களுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருந்தது. புலி வருது கதையாக அமைச்சரவையை இப்போது மாற்ற போகிறார்கள், அப்போது மாற்ற போகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மாற்றம்
ஆனால் அமைச்சரவையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்தன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

ரிப்போர்ட்
2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவது உறுதி ஆகி உள்ளது. அவர் இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் ஆகிறார். முதல்வரிடம் இருந்த சிறப்பு திட்ட துறை உதயநிதியிடம் வழங்கப்பட உள்ளது. இவர் போக வேறு அமைச்சர்கள் யார் யார் மாற்றப்பட உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, பெரியகருப்பன், செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 12 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்களின் துறைகள் மாற்றப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

மாற்றப்பட உள்ள துறைகள்
இது போக ஐ பெரியசாமியின் துறை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஐ பெரியசாமி எம்எல்ஏ அமைச்சரான போது பெரிய துறை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது பெரிய துறை வழங்கப்படவில்லை. ஐ பெரியசாமிக்கு அவர் எதிர்பார்த்தபடி ஊரக உள்ளாட்சி துறையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முக்கியமான துறை என்பதால் ஐ பெரியசாமி இதை பெற்றுக்கொண்டு திருப்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அவருக்கு கூட்டுறவு துறை வழங்கப்பட உள்ளது. இடையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர் மாற்றம்
ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் தற்போது அமைச்சர் இல்லை. திருவாரூரில் அமைச்சர் இல்லை. திருச்சியில் மட்டுமே இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் தஞ்சாவூரில் அல்லது திருவாரூரில் அமைச்சர் ஒருவரை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சேலத்தில் ஒரு அமைச்சர் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் புதிதாக 2 அமைச்சர்கள் அமைச்சரவையில் இணைய வாய்ப்புகள் உள்ளன. டிஆர்பி ராஜா, பூண்டி கலைவாணன், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவைக்கான போட்டியில் இருக்கிறார்கள்.

பிளான் என்ன?
முதுகு வலி காரணமாக சமீபத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூக்கமும், போதிய அளவில் ஓய்வும் வேண்டும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்திருந்தனர். இப்போது ஓய்வுதான் முக்கியம். முடிந்த அளவு ரெஸ்ட் எடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், முதல்வரால் ஓய்வு எடுக்கமுடிவதில்லை. அரசு பணிகளையும் கட்சி பணிகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அரசு நிர்வாகத்திற்குள் வந்தால் உதயநிதி உதவியாக இருப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளனர். இதையடுத்தே உதயநிதியை அமைச்சராக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications