மோடிக்கு பெரியார் என்ன சொல்லியிருப்பார்? மாணவர் அளித்த பதிலுக்கு ராகுல் காந்தி கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் திருவள்ளுவர் மற்றும் பெரியார் குறித்து பேசினார். அப்போது மாணவரிடம், மோடிக்கு பெரியார் என்ன சொல்லியிருப்பார்? என்று ராகுல் காந்தி கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவர், 'மதமும் ஜாதியும் பெரிதல்ல' என்று சொல்லியிருப்பார் என்று கூறினார். இதனை ராகுல் காந்தி உன்னிப்பாக கவனித்தார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரல் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது:-

Rahul Gandhi

ஜனநாயக உணர்வுதான் ஒவ்வொரு மாணவரின் மனதிலும் இருக்கிறது. ஒருவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் அப்படியே பின்பற்றாதீர்கள். உங்கள் கலை வரலாறு, மண் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளுங்கள். நம்மை பற்றி அறிதல், எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பது மாணவ பருவத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பு ஆகும். மாணவராக இருப்பதின் அடிப்படை அம்சமே, ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதுதான்.

தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும் போது எதையாவது கற்றுக்கொள்கிறேன்.. தமிழ்நாட்டின் இரண்டு பேராளுமைகள் திருவள்ளுவர், பெரியார். கேள்வி கேட்பதே வளர்ச்சியின் அடிப்படை. பெரியார் அனைத்தையும் கேள்வி கேட்பார். வாக்கு திருட்டு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தமிழ் கலாசாரம், வரலாறு, பாரம்பரியம் மீது முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படுகிறது.

தமிழக மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது. இந்தியை திணிப்போம் என வெளிப்படையாக சொன்னவர் அமித்ஷா. தொகுதி மறுவரையரால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். தமிழ்நாட்டை தொட விட மாட்டோம்" என்றார். முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் மாணவர் ஒருவர் திருவள்ளுவர் மற்றும் பெரியார் குறித்து பேசினார்.

அப்போது, மாணவரிடம் மோடிக்கு பெரியார் என்ன சொல்லியிருப்பார்? என்று ராகுல் காந்தி கேட்டார். இதற்கு பதிலளித்த மாணவர், 'மதமும் ஜாதியும் பெரிதல்ல' என்று சொல்லியிருப்பார் என்று கூறினார். இதனை ராகுல் காந்தி உன்னிப்பாக கவனித்தார். தொடர்ந்து பெரியார் குறித்த மாணவர் பேச்சுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+