உங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கிய அறிவுரை
சென்னை: தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 2994 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 16,354 தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,30,876 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவமனைக்கு சென்று கொரோனா சோதனை செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் மருத்துவமனைகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எல்லா மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அறிவுரை
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டு உள்ளன. எல்லா மருத்துவமனைகளுக்கும் போதுமான ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா சோதனைகளை செய்து வருகிறது. அதில் பலர் கொரோனா பாசிட்டிவ் என்று வருகிறார்கள். உங்களுக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுவிட்டு வீட்டில் இருக்க வேண்டும். வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா இருப்பவர்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும், என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா
தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.

அறிகுறிகள்
இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சமீபத்தில் நாடு முழுக்க ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மக்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications