சசிகலாவை தொடர்பு கொள்ளும் எம்எல்ஏக்கள்..? நெருக்கடியில் எடப்பாடியார்! என்ன செய்யும் பாஜக?
சசிகலாவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: சசிகலாவின் அரசியல் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், மேலும் அதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் றெக்கை கட்டி வலம் வந்து கொண்டிருக்கின்றன..!
விமர்சனங்களுக்கு இடமில்லாமல் தங்களை பார்த்து கொண்டாலும், எதிர்க்கட்சியை பலவீனமாக்கும் முயற்சியில் திமுக இறங்கும் என்று எடப்பாடி கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும்..
அதனால்தான் வாக்காளர்களின் மனநிலைமையை புரிந்து கொள்ளவே முடியலையே என்ற ஆதங்கத்தை சேலத்தில் நேற்று முன்தினம் வெளிப்படுத்தியிருந்தார்... இந்த சூழலில்தான், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து நிர்வாகக் குழு முடிவு செய்யும் என்று ஓபிஎஸ் சொன்னது எடப்பாடிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

நிர்வாகிகள்
ஓபிஎஸ் கடந்த சில நாட்களாக சொல்லிவரும் கருத்துக்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட, தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆதரவு தரும்படி பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல ஓபிஎஸ் பேட்டி தரும்போது, அவருடன் தென்மண்டல நிர்வாகிகள் உடன் இருப்பதை காண முடிந்தது. இதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு சங்கடத்தை தந்து வருவதாக தெரிகிறது.

அதிமுக
இரண்டாவதாக, சில எம்எல்ஏக்கள் சசிகலா பக்கம் அணி தாவ உள்ளதாக கூறப்படுகிறது.. திமுக ஆட்சியில் அமர்ந்தாலும்கூட, எங்களுக்கு 64 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், நாங்கள்தான் பலமான எதிர்க்கட்சி என்று எடப்பாடி அடிக்கடி பெருமையுடன் சொல்லி வருகிறார்.. எடப்பாடி முதல்வராக இருந்தபோதே ஒருசிலர் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இந்த ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையானது சமீப காலமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சசிகலா விஷயத்தில் பாஜக மேலிடத்தின் அணுகுமுறை என்கிறார்கள்.

பாஜக
டெல்லியை பகைத்து கொண்டோ அல்லது எதிர்த்து கொண்டோ முழுவீச்சில் இறங்கி அரசியல் செய்ய முடியாத நிலைமை சசிகலாவுக்கு இருக்கிறது என்றாலும், சசிகலாவின் நிகழ்கால அணுகுமுறையை பார்க்கும்போது டெல்லியின் மறைமுக ஆதரவு இருக்கவே செய்யும், இல்லாவிட்டால் அவரது அதிரடிக்கு கடிவாளம் போடப்பட்டிருக்குமே என்று அரசியல் நிபுணர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.. பாஜக காட்டிய பச்சை சிக்னல் காரணமாகவே சசிகலா 2வது இன்னிங்ஸ் தொடங்கி உள்ளதாக தெரிகிறது.
Recommended Video

சமூகம்
அதேசமயம், இந்த ஒரு வார கால சசிகலாவின் அரசியலை மட்டும் எடுத்து கொண்டால், தென்மண்டலத்தை மட்டுமே வைத்து அவரது குறி நகர்ந்து வருகிறது.. இதே நிலை தொடர்ந்தால் ஒரு சாதிய தலைவராக அல்லது ஒரு சமூகத்துக்கு மட்டுமே அவர் ஆதரவாளராக அடையாளப்படுத்தப்படுவாரே தவிர, ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் பொதுவான அடையாளமாக திகழ முடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.. மேலும் பிற சமூகத்தினரின் ஆதரவையும் சசிகலா பெற தவறிவிடுவார் என்பதையும் கணிக்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications