அசைன்மென்ட் தந்த ஸ்டாலின்.. "என்ன பண்ணுவீங்களோ தெரியாது, 100% வந்தாகணும்.. அமைச்சருக்கு போட்ட ஆர்டர்
செந்தில்பாலாஜிக்கு முதல்வர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்
சென்னை: கொங்கு மண்டலத்தில் அபார வெற்றியை பெற, முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.. அதன்படி பரபரப்பு உத்தரவு ஒன்றினை, முக்கிய அமைச்சருக்கு பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது திமுக..
சில இடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆனது.. இது தொடர்பான வருத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது கணக்காக இருந்தது..

சறுக்கல்
குறிப்பாக, கொங்கு மண்டலம் திமுகவை சறுக்கிவிட்டது.. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த எம்பி தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது... அதாவது, திமுக எளிதாக வெற்றி பெறக்கூடிய இடங்களிலும் அதிமுக வெற்றிபெற்றது.. இதற்கு, உள்ளடி வேலைகள் மற்றும் களப்பணிகளை மூத்த நிர்வாகிகள் யாரும் சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பின..

காரணங்கள்
அதிருப்தி காரணமாக சீட் கிடைக்காதவர்கள் சுணங்கி போய்விட்டார்கள் என்றும், சில தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவின் கறுப்பு ஆடுகள் வேலை பார்த்ததாகவும் கூறப்பட்டது.. அதனால்தான் திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அப்போதே ஒரு ரிப்போர்ட் கேட்டிருந்தார்.. அதன்படி சில களையெடுப்பு நடவடிக்கையையும் எடுத்திருந்தார்..

செந்தில் பாலாஜி
இதற்கு பிறகுதான், வெட்டி வா என்றால் கட்டி வந்து நிற்கும் செந்தில் பாலாஜியிடம் கொங்குவை நம்பி ஒப்படைத்தார்.. தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்தார்.. அவரும் அன்றிலிருந்து கோவையில் தங்கி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.. இதற்காக அங்கேயே வீடு எடுத்து தங்கி விட்டார்.. கொங்கை திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவேன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வைப்பேன் என்று முதல்வரிடம் நம்பிக்கை வார்த்தையை சொல்லிவிட்டுதான் களத்தில் இறங்கியிருக்கிறார்..

ரிசல்ட்
இருப்பினும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஸ்டாலினுக்கு கிடைக்கும் தகவல்கள் தேர்தல் ரிசல்ட்டை பாதிப்பதாக உள்தாக தெரிகிறது.. காரணம், எஸ்.பி.வேலுமணியின் வலிமை முழுவதுமாக அங்கு குறைந்து போய்விடவில்லை.. அவருக்கான ஆதரவு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. அவ்வளவு ஏன், வேலுமணியால் பயனடைந்த சில விசுவாசிகளே, திமுகவில் முக்கியமான பொறுப்புகளில்தான் இருக்கிறார்களாம்..

கறுப்பு ஆடு
கடந்த முறை தேர்தலில் அதிமுக கொங்குவை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவரே வேலுமணிதான்.. அதாவது திமுகவில் இருந்த சில கறுப்பு ஆடுகள்தான்.. அவர்களால்தான் திமுகவின் வெற்றியே கேள்விக்குறியானது.. இப்போது வேலுமணிக்கு அந்த கறுப்பு ஆடுகள் இன்னமும் உதவி கொண்டிருக்கிறதா என்னவென்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் இந்த தேர்தல் முடிந்த பிறகு, அத்தனை கறுப்பு ஆடுகளுக்கும் முடிவு கட்ட திமுக மேலிடம் முடிவு கட்ட போகிறதாக தெரிகிறது. அதனால்தான், தமிழகம் முழுவதுமான உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஆராய்ந்து வருகிறார் ஸ்டாலின். நேர்மறை, எதிர்மறை தகவல்கள் கிடைத்து வருகின்றன.

அசைன்ட்மென்ட்
இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஸ்டாலினுக்கு கிடைக்கும் தகவல்கள் தேர்தல் ரிசல்ட்டை பாதிப்பதாக உள்ளது.. எனவே, செந்தில் பாலாஜிக்கு முக்கிய உத்தரவினை முதல்வர் பிறப்பித்துள்ளாராம். அதன்படி, "கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி முக்கியம். அதுவும் குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 100 சதவீத வெற்றி எனக்குத் தேவை " என்று செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஸ்டாலின். இதனால் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும், கூடுதல் கவனம் செலுத்தவும், தனது சொந்த மாவட்டத்தில் இருந்து ஆட்களை கோவை மண்டலத்துக்குள் இறக்குமதி செய்து வருகிறார் செந்தில்பாலாஜி.
-
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்












Click it and Unblock the Notifications