பச்சை சிக்னல்.. "ஆர்எஸ்எஸ்" தலைவர்களை சந்திப்பாரா சபரீசன்?.. ஸ்டாலின் ஓகே சொல்வாரா??
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என்கிறார்கள்
சென்னை: இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்குமோ என்ற ஒரு சந்தேகம் அரசியல் களத்தில் வலுத்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதை உறுதி செய்யும்படியான சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
டெல்லியில் நல்ல தொடர்பை வைத்திருப்பவர் சபரீசன்... காங்கிரஸ், பாஜக தலைவர்களுடன் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களோடும் தொடர்பு உண்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தலைமை விரும்பியுள்ளது..
அதனால், ஆர்எஸ்எஸ். மூலமாக சபரீசனிடம் 2020 ஜனவரியில் ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தியது. இதற்காக, நாக்பூருக்கும் சென்று வந்தார் சபரீசன்.

கூட்டணி
இதற்கு காரணம், திமுக-பாஜக கூட்டணி உருவாக வேண்டுமென்கிற விருப்பம் தனிப்பட்ட முறையில் சபரீசனுக்கு இருந்ததுதான்.. எனினும், தலைவரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும் என்று அப்போது ஆர்எஸ்எஸ் தலைவரிடம் தெரிவித்து விட்டார் சபரீசன்.. உடனே இதை பற்றி ஸ்டாலினின் கவனத்துக்கும் சபரீசன் கொண்டு போயுள்ளார்..

பாஜக
இருவருமே இதை பற்றி விவாதித்துள்ளனர்.. இறுதியில், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டாராம்.. காரணம், அப்போதைய சூழலில் கூட்டணி வேண்டாம் என்று ஸ்டாலின் யோசித்துள்ளார்.. இதற்கு பிறகு, கொரோனா பொது முடக்கம், நெருக்கடி என வந்ததால் டெல்லியின் சந்திப்புகள் சபரீசனுக்கு தடைபட்டன.

சூழ்நிலை
இந்த நிலையில்தான், மறுபடியும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சபரீசனை தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனராம்.. இந்த முயற்சிக்கு க்ரீன் சிக்னலும் விழுந்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.. எனவே, இது தொடர்பாக டெல்லிக்கு சபரீசன் ரகசிய பயணம் சென்று வரக்கூடும் என்றும் மேலிட சோர்ஸ்கள் இப்போதே கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டன.

சபரீசன்
சபரீசனுக்கான முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என சித்தரஞ்சன் சாலையின் கிச்சன் கேபினெட் விரும்பினாலும், ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்கிறார்கள். .. கிச்சன் கேபினெட் தன்னுடைய முக்கியத்துவத்தை குறைக்க நினைக்கும் விஷயம் சபரீசனுக்கும் தெரிந்துள்ளது.. அதனால்தான், ஈசிஆரில் சைக்கிள் ஓட்டி தனது ஃபிட்னஸ்ஸை நிரூபித்த ஸ்டாலின், அன்றைய தினம் நீலாங்கரை பங்களாவில் சபரீசனை சந்தித்து சமாதானம் படுத்தினாராம்..

நெருக்கடி
இதற்கு பிறகுதான், திருவாரூர் பயணத்தில் தன்னுடன் சபரீசனையும் அழைத்து சென்றுள்ளார் ஸ்டாலின் என்கின்றனர். இதற்கிடையே, இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. மருமகனை விட மகனுக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும் என கிச்சன் கேபினெட், ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பதாக வருகிற தகவல்களை உதயநிதி தரப்புதான் பரப்பி வருகிறதோ என்ற சந்தேகம் சபரீசன் தரப்புக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!











Click it and Unblock the Notifications