ஓஹோ.. "இது"தான் சசிகலா திட்டமாமே.. டெய்லி இதைத்தான் செய்ய போறாராம்... ஒர்க் அவுட் ஆகுமா?
சசிகலா அடுத்த என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: காலையில் இருந்து பரபரப்பு எகிறி கொண்டு வரும் இந்த சூழலில், சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற தகவலும் கசிந்து வருகிறது..!
காரில் கொடி, கழுத்தில் துண்டு என ஒருமுடிவோடு வந்துள்ளார் சசிகலா.. இந்த ஒரு சிக்னலே அதிமுகவுக்கு போதுமானதாக இருந்து வருகிறது.
இதன் மூலம் அதிமுக தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்துள்ளார் சசிகலா... இனி அடுத்து அவர் செய்யப் போகும் வேலையையும் சிக்னலிட்டு காட்டி விட்டார்.. இனி தினமும் தி நகர் வீட்டில் நிர்வாகிகளை சந்திக்க போகிறார்.. அநேகமாக அதிமுகவின் பெருந்தலைகளை உள்ளே இழுக்கும் வேலையை சசிகலா அதிரடியாகவே ஆரம்பிக்கலாம்.

மீடியா
ஆனாலும், அதன்பிறகு என்ன செய்வார்? ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.. இன்று முதல்நாள் என்பதால், மூத்த தலைகள், நெருக்கமான ஆதரவாளர்கள் வெளிப்படையாக சசிகலாவை வரவேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.. மொத்த மீடியாவும் சசிகலாவின் வருகையை ஃபோகஸ் செய்து வருவதால், சிறிய அளவிலான ஆதாரவாளர்கள், மற்றும் தொண்டர்களின் வரவேற்பை மட்டுமே சசிகலா பெற்று கொள்வார் என்று கூறப்படுகிறது.

எம்ஜிஆர்
இதற்கு நடுவில், சட்டரீதியாகவும் அவர் சில நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சசிகலா செல்லக்கூடும் என்கிறார்கள்.. அப்படியே சசிகலா சென்றாலும், அதில் எந்த சட்டப்படி தவறும் இல்லை என்கிறார்கள்.. அதேபோல எம்ஜிஆர் சமாதிக்கும் செல்லலாம்.. எம்ஜிஆர் சமாதியில் யாரையும் தடுத்து நிறுத்த முடியாது.. ஒருவேளை கும்பலாக சென்றால் வேண்டுமானால் கட்டுப்பாடுகள் போடப்படலாம், அதுவே சசிகலா, தனியாக எம்ஜிஆர் சமாதிக்கு சென்றாலோ, அதற்கு பின்னால் உள்ள ஜெயலலிதா சமாதியின் வாயிலில் நின்றாலோ, யார் என்ன கேட்க முடியும்? என்ற கேள்வியும் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பிரதமர்
எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவை அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது.. இது சம்பந்தமாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி வருகிறது.. வரும் 14ந் தேதி சென்னைக்கு பிரதமர் வர போகிறார்... இதை தவிர பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வரப்போகிறது. இந்த 24-ம்தேதி வரைதான் சசிகலா கெடு வைத்திருக்கிறாராம்.

அதிரடி
24-ம் தேதிக்குள் எல்லாம் தானாகவே சுமூகமாகிவிட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை, ஒருவேளை இப்போதுள்ளது போலவே எதிர்ப்புகள் தொடர்ந்தால், அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் தான் என்று பறைசாற்றியபடி, அதிமுகவை மீட்டெடுக்க தயாராக போகிறாராம்.. அதன்படி, அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செல்லவும் ரெடியாகி வருகிறாராம். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை..

24-ம் தேதி
காரணம், அமமுகவில் சசிகலா உறுப்பினரே இல்லை.. அதனால்தான் அதிமுக கொடியுடன் வருகிறார்.. அதிமுகவை மீட்டெடுக்க அமமுகவை பயன்படுத்துவது ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது அமமுகவில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுடன் பலவருட காலம் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தவர்கள் என்பதால், இது சக்ஸஸ் ஆகுமா என்று தெரியவில்லை..

பிரதமர் மோடி
அதேசமயம் எல்லாவித, அதிரடிகளையும் இன்று ஒரேநாளில் எடுத்துவிடாமல், ஜெ.பிறந்த நாள் வரை காத்திருப்பார், அவசரப்பட்டு எதையும், செய்ய மாட்டார் , இன்னும் ஓபனாக சொல்லபோனால், பிரதமர் வந்து சென்ற உடனேயே பலவித மாறுதல்கள் தானாகவே ஏற்படும் என்றும் அரசியல் கணித்து சொல்கிறார்கள்.. எப்படியோ, ஒரு முடிவோடுதான் சசிகலா இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகி கொண்டிருக்கிறது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications