சீக்ரெட்கள்.. யார் அந்த பாஜக பிரமுகர்?.. சசிகலாவுக்கு உதவுகிறாராமே.. எகிறும் களம்

ஓபிஎஸ் எதற்காக டெல்லி சென்றார் என்ற தகவல் கசிந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் எதற்காக டெல்லி சென்றிருக்கிறார்கள் என்ற ஆர்வம் சசிகலாவுக்கு எழுந்தபடியே உள்ளதாம்.. இது சம்பந்தமான தகவல்களை தர சொல்லி, நெருக்கமான பாஜக நண்பர் ஒருவரிடம் கேட்டு கொண்டே உள்ளாராம்.

இன்று ஓபிஎஸ்சும், எடப்பாடி பழனிசாயும் டெல்லியில் உள்ளனர்.. இவர்களுடன் மாஜிக்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோரும் சென்றுள்ளனர்..

இவர்கள் ஏன் அவசர அவசரமாக டெல்லிக்கு போனார்கள்? என்ன அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு சென்றார்களா? அல்லது டெல்லி அழைத்ததன் பேரில் சென்றுள்ளார்களா? என்று சசிகலா கேள்வி மேல் கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறாராம்.

 டெல்லி விசிட்

டெல்லி விசிட்

சசிகலா இப்படி கேட்டதற்கு காரணமும் உள்ளது.. அதாவது பெங்களூர் ஜெயிலில் சசிகலா இருந்தபோது, கர்நாடக பாஜகவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சசிகலாவுக்கு நட்பாகியிருக்கிறார்... அவர் மூலம்தான் டெல்லியின் ரகசியங்களை அறிந்து வந்துள்ளார் சசிகலா... இந்த நிலையில் அந்த தொழிலதிபர் மூலம்தான், எடப்பாடிபழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைகள் எதற்காக டெல்லி சென்றனர் என்பதை விசாரித்துள்ளார் சசிகலா.

சசிகலா

சசிகலா

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு எம்பிக்குரிய பங்களா ஒதுக்கப்பட்டிருகிறது... அதற்கு பால் காய்ச்சவே சென்றுள்ளனர் என்று சசிகலாவுக்கு அந்த பாஜக தொழிலதிபர் முதல்கட்டமாக தகவல் தந்துள்ளார்... அப்படியானால், டெல்லியில் அவர்கள் இருக்கும் நாட்களில் யாரையெல்லாம் சந்திக்கிறார்கள் ? சந்திப்பின் நோக்கம் என்ன? சந்திப்பில் நடப்பது என்ன ? என்பதை தெரிந்து சொல்லுமாறு அந்த தொழிலதிபர் நண்பரிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் சசிகலா.

 மொரீசியஸ்

மொரீசியஸ்

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. கொரொனோ முதல் அலையின் தாக்கம் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மொரீசியஸ் தீவுக்கு சார்ட்டர்ட் ப்ளைட்டில் சென்றிருந்தார் எம்பி ரவீந்திரநாத்... அங்கு சில ஹவாலா தொடர்பாக இவரை மொரீசியஸ் போலீசார் பிடித்து வைத்துக்கொண்டது.

தமிழகம்

தமிழகம்

தான் இந்திய அரசின் ஒரு எம்பி என்று ரவீந்திரநாத் அவர்களிடம் சொல்லவும், அந்த தகவல் இந்திய அரசுக்கு பாஸ் ஆகி உள்ளது.. அதற்கு பிறகு இந்திய அரசு தீவிரமான முயற்சி எடுத்து ரவீந்திரநாத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல் தமிழகம் திரும்பும்படி நடவடிக்கை எடுத்தது.. எனினும் இது தொடர்பான புகாரை சட்டப்படி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது மொரீசீயஸ் அரசு...

 நடவடிக்கை

நடவடிக்கை

அதன்படி சில நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு துறை எடுத்து வைத்துள்ளது. அதனால், ரவீந்திரநாத் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் பதிவாகி நிலுவையில் இருந்தால் அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரகசியமாக வைக்கவே, ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக இன்னொரு தகவலும் பரபரத்து வருகிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+