பாயும் புலியாக மாறுமா பாமக.. உள்ளாட்சி தேர்தலில் ஊர் ஊராக தனித்து களம் இறங்குமா?
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுமா என்பது சந்தேகமாக உள்ளது
சென்னை: உள்ளாட்சி தேர்தல் கூடிய சீக்கிரம் வரப்போகிறது.. தேர்தலுக்கு பின் கடும் நெருக்கடி நிலையில் உள்ள, பாமக இதில், என்ன செய்ய போகின்றன என்பது இதுவரை தெரியவில்லை.
வட மாவட்டங்களில் அவங்க மட்டும்தான் கெத்தா, நாங்க கிடையாதா என்று பேரம் பேசி கூட்டணியில் சேர்ந்தது தேமுதிக. கடைசியில் இரண்டு பேருமே தோற்று விட்டார்கள். ஒரே ஆறுதல் என்னவென்றால், பாமக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இப்போது விஷயம் என்னவென்றால், பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தங்களுக்கு தோல்வி என்பதை இந்த கட்சிகள் எல்லாருமே நினைக்க தொடங்கிவிட்டனர். ஒருசிலர் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர்.

எப்போது தேர்தல்?
அதனால் உள்ளாட்சி தேர்தலில் பாமக என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால், உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த போகிறீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தவர் ராமதாஸ்தான். கடந்த 2018, மார்ச் 23-ம் தேதி, "தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல் காலம் தாழ்த்தியதால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி 1,950 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சொல்லி அறிக்கையே வெளியிட்டார்.

தொண்டர்கள்
மேலும் போன வருஷம் ஜனவரி 4-ம் தேதி, "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடும்" என்றார். அவ்வளவு எதற்கு, இப்போது வந்த ரிசல்ட்-க்கு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்கூட, "பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும்" என்று ஊக்கம் தரும் வகையில் எழுதியிருந்தார். அதனால்தான் பாமக தரப்பில் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

வேல்முருகன்
இந்த சூழலில், தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுமா என தெரியவில்லை. இல்லையென்றால், எப்படியும் திமுக தரப்பில் வேல்முருகன் வன்னியர் வாக்குகளை பெற்று தருவதில் தீவிரமாகவே இறங்குவார். இதுபோக காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் இறங்க வேலைபார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு வங்கி
நடந்து முடிந்த தேர்தலில் பாமகவுக்கு நல்ல வாக்கு வங்கி கூடி உள்ளது. வட மாவட்டங்களில் செல்வாக்கை பெற்றுள்ள பாமக, ஒருவேளை தனித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கவே செய்யும். ஏனென்றால், உள்ளாட்சி தேர்தல் என்பது முற்றிலும் லோக்கல் அதாவது உள்ளூர் பலத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் வார்டு, நகராட்சி என ஒன்றுவிடாமல் களம் இறங்கி வேலை பார்க்க வேண்டும்.

திண்ணை பிரச்சாரம்
இதில் பாமகவுக்கு பிளஸ் ஆக உள்ளது திண்ணை பிரச்சாரம்தான். தொகுதிகளில் மக்களுடன் நல்ல நெருக்கத்தை அதிகரிப்பது பாமகவுக்கு எளிதான ஒன்று. அதற்கு பெருமளவு கை கொடுப்பது திண்ணை பிரச்சாரங்கள்தான். என்றாலும் இதில் பாமக தனித்து போட்டியிடுமா, அல்லது இதே கூட்டணி தொடருமா என்பதை பாமகதான் சொல்ல வேண்டும்.

எதிர்பார்ப்பு
ஒருவேளை, கூட்டணியால்தானே இவ்வளவு வம்பும் வந்தது என்பதால் தனித்து களமிறங்குமோ என்ற அறிவிப்பும் இதுவரை இல்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications