வாவ்! மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏதேனும் சந்தேகமா? வாட்ஸ் அப் மூலமே க்ளியர் செய்து கொள்ளலாம்!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம், தகுதி தொடர்பான எந்த சந்தேகங்கள் இருந்தாலும் சென்னை மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை வாட்ஸ் அப் வாயிலாக 94454 77205 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. திமுக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகும் 2 ஆண்டுகளாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் நலன்காக்க நிறைவேற்றிய திட்டங்களைப் போற்றும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' என்று பெயரிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இதனையடுத்து, விண்ணப்ப பதிவு முகாமை தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்ப பதிவு தொடர்ந்து நடைபெறவுள்ளது. பின்னர், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது.
தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 98 வார்டுகளில் உள்ள 703 நியாய விலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும். உங்கள் ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்த ரேஷன் கடையில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவிகள் டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்னப்ப பதிவின் போது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை. எனவே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளைப் பெறவும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். விரல் ரேகை சரியாக பதிவாகவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட கைபேசி வழியாக ஓடிபி எண் பெறப்படும். எனவே விண்ணப்ப பதிவு முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போனை எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-25619208 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது 1913 எனும் உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப் வாயிலாக 94454 77205 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டலம்1 - 9445190201, மண்டலம் 2 - 044-25941079, மண்டலம் 3 - 9445190203, மண்டலம் 4 - 9445190204, மண்டலம் 5 - 9445190205, மண்டலம் 6 - 9445190206/9445190926, மண்டலம் 7 - 9445190207/044-26257880, மண்டலம் 8 - 9445190208, மண்டலம் 9 - 9445190209, மண்டலம் 10 - 9445190210, மண்டலம் 11 - 9445191432, மண்டலம் 12 - 9445190212, மண்டலம் 13 - 9445190213, மண்டலம் 14 - 9445190214, மண்டலம் 15 - 9445190215. இதன் மூலம் தங்கள் மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications