பாமாயிலை விடுங்க.. "இந்த பொருளின்" விலை திடீர்னு உயர்ந்தது..பண்டிகை வேற கிட்ட நெருங்குது.. என்னாச்சு
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், திடீரென கோதுமை விலை உயர்ந்துள்ளது, நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.. என்ன காரணம்?
மத்திய அரசு, கடந்த மாதம் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, சமீபத்தில், 1,038 டன்னாக குறைத்திருந்தது.. இதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.. மேலும், தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
பிறகு இந்த வஷியத்தை தமிழக அரசு கையிலெடுத்தது. "தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.. இதுதொடர்பாக, தமிழக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் நேரிலும் சென்று பேசினார்கள்..

முன்னுரிமைகள்: இறுதியில், தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் தருவதாக உறுதி தந்துள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது, "முன்னுரிமை கார்டுதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தவறு சுட்டிக் காட்டப்பட்டதால், இப்போது, தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோலவே, மாத மாதம், 8,500 டன் கோதுமையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இந்த தகவலானது பெருத்த நிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், திடீரென கோதுமை விலை உயர்ந்துள்ளது.. அதுவும் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.6% அதிகரித்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த திடீர் விலைஉயர்வுக்கு காரணம், குறைந்த அளவு இருப்பு, அதிகப்படியான இறக்குமதி வரி போன்றவைதான் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த வருடம், இந்திய விவசாயிகளிடமிருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 26 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.
கோதுமை அளவு: மேலும், அரிசியை போலவே, கோதுமையின் தேவை அதிகமாக உள்ளது.. இன்றியமையாத உணவாகவும் கோதுமை திகழ்ந்து வருகிறது.. பண்டிகை காலமும் தற்போது துவங்கிவிட்டது.. ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வருவதால், கோதுமையின் தேவையும் அதிகரித்துள்ளது.. இப்படிப்பட்ட நேரத்தில், கோதுமை விலை உயர்ந்துள்ளது கவலையை உண்டுபண்ணி வருகிறது.
டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமையின் விலை 27,390 ரூபாயாக உயர்ந்துவிட்டதாம்.. இது கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும்போது, 22% அதிகம் என்கிறார்கள்.. இனிவரும் நாட்களில் கோதுமை விலை மேலும் உயர்ந்தால், உணவு பணவீக்கமும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பண்டிகைகள்: தேர்தல் நெருங்கிவருவதால், இருப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலமும், கோதுமை மீதான 40% இறக்குமதி வரியை குறைப்பன் மூலமும் இந்த விலையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எனினும், பண்டிகைகள் நெருங்கிவிட்டதால், அரசு இது தொடர்பான நடவடிக்கையை விரைந்து எடுக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications