விஜய் ஆட்சிக்கு வந்ததும்.. இதை செஞ்சா போதும்.. அஜித் ரசிகர்கள் வைத்த கோரிக்கை.. டிரெண்டான மீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் ஒரு முக்கியமான விஷயம் செய்ய வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

When Actor Vijay Tamizhaga Vetri Kazhagam wins election: Ajith Fans have different request

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்தும் பெரும்பாலும் ரிட்டையர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் கோரிக்கை: இந்த நிலையில்தான் விஜய் ஆட்சிக்கு வந்ததும் ஒரு முக்கியமான விஷயம் செய்ய வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தாமல் பெரும்பாலும் பைக் ரைடு மேற்கொண்டு வருகிறார்.

வெளிநாடுகளுக்கும், இந்தியாவிற்கு உள்ளேயும் தீவிரமாக பைக் ரைடு மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் மகிழ் திருமேனி இயக்கம் விடாமுயற்சி படம் கூட நீண்ட காலம் தள்ளிப்போய் அதன்பின் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷெகேடுல் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது.

When Actor Vijay Tamizhaga Vetri Kazhagam wins election: Ajith Fans have different request

இந்த நிலையில்தான் விஜய் ஆட்சிக்கு வந்ததும்.. அஜித்தின் லைசன்ஸ்ஸை நீக்க வேண்டும். அப்போதுதான் அவர் பைக் ரைடு செய்யாமல்.. படங்களில் அதிகம் நடிப்பார் என்று அஜித் ரசிகர்கள் விளையாட்டாக கோரிக்கை வைத்துள்ளனர். இதை வைத்து அவர்கள் விளையாட்டாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அரசியல் அறிவிப்பு: நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+