சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை முக்கிய அறிக்கை தாக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் இது தொடர்பான அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. 95 சதவீதம் பெற்றோர் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை குறைத்துவிட்டதால் அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டன. இதுவரை பள்ளிகள் மட்டுமே திறக்கப்படாமல் உள்ளது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை குறைந்துவிட்தால் அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டன. இதுவரை பள்ளிகள் மட்டுமே திறக்கப்படாமல் உள்ளது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்.... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கைஇன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்.... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை

10, 12ம் வகுப்பு மாணவர்கள்

10, 12ம் வகுப்பு மாணவர்கள்

இதையடுத்து பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விருப்பம் கேட்டறியப்பட்டது.

பொங்கலுக்கு பிறகு திறப்பு

பொங்கலுக்கு பிறகு திறப்பு

கடந்த 2 நாட்களாக 12 ஆயிரம் பள்ளிகளில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என்று பெற்றோர்களிடம் கருத்துக்களை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். கடந்த 2 நாட்களில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் 95 சதவீதம் பெற்றோர் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறின.

மாணவர்கள் நலன்

மாணவர்கள் நலன்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் போதிய இடைவெளியுடன், மாணவர்கள் வகுப்புகள் நடத்தலாம், பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றி மாணவர்கள் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளி வளாகம், வகுப்புகளில் ஒன்று கூடி பேசுவதை தவிர்க்கவும், கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கவும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மாணவனுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து தர வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.

நாளை அறிக்கை தாக்கல்

நாளை அறிக்கை தாக்கல்

அனைத்து மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக பெற்றோர்களின் கருத்துக்கள் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பபி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை கருத்துக்கள் பெறப்படுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் இறுதி செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களின் விருப்பத்தை அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிக்கையாக நாளை சமர்பிக்க உள்ளது. பெற்றோர்களின் கருத்துககளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்க உள்ளது

பள்ளி திறப்பு தேதி

பள்ளி திறப்பு தேதி

பொங்கலுக்கு பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி அல்லது அதன்பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்யவாய்ப்பு உள்ளதாம். இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், 'பள்ளிகள் திறப்பது பற்றி, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து முடிவு எடுத்து முதல்வருக்கு தெரிவிக்கும். அதன் பின்னர் பள்ளிகள் திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார் என்றார்.

English summary
The report is due to be tabled tomorrow after the completion of consultation meetings with parents on the opening of schools in Tamil Nadu. Ninety-five percent of parents are said to have expressed a desire to reopen schools after Pongal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X