அது கிடக்கட்டும்.. நீங்க எப்போ சரணடைய போறீங்க? ப.சிதம்பரத்தை விளாசிய தமிழிசை
Recommended Video
சென்னை: பெயில் வாங்கி வெள்ளி விழா முடிந்து நீங்கள் சரணடைவது எப்போது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ப.சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை கேதார்நாத் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை சென்றார். அங்கிருந்த பனிக்குகையில் விடிய விடிய 18 மணிநேரம் அவர் தியானம் மேற்கொண்டார்.
தியானம் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னுடைய தியானத்தில், கடவுள் என்னை கொடுக்கும் நிலையில் வைத்திருப்பதால் எதையும் வேண்டிக் கேட்கவில்லை. உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி, வளத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் பிரார்த்தித்தேன்.

ஆணையத்துக்கு நன்றி
இறுதிக்கட்டத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் நான் இங்கு செல்ல அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார. இவை அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

தூங்குகிறது
இதைத்தொடர்ந்து மோடியின் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மோடியின் ஆன்மிக யாத்திரை தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ‘‘தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யாமல் தூங்கி கொண்டிருக்கிறது என நாங்கள் குற்றம்சாட்டி வருகிறோம்.

சரணடைந்துவிட்டது
தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முற்றிலும் சரணடைய செய்துவிட்டது. இது வெட்கக்கேடு. வாக்குகளை கவர்வதற்காக தேர்தலின் கடைசி இரண்டு நாளில் மதத்தையும், மத அடையாளத்தையும் பயன்படுத்தி பிரதமர் புனிதப் பயணம் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது'' என்றார்.
|
எப்போ சரணடைய போறீங்க?
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, பெயில் வாங்கி வெள்ளி விழா முடிந்து நீங்கள் சரணடைவது எப்போது? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் கோயில் யாத்திரை செல்லும் ராகுல் பிரியங்கா? தேர்தல் முடிந்ததும் திகார்? பயமா? பசி? பதவிப்பசி? பரிதவிப்பா?? என கேட்டுள்ளார் தமிழிசை,
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications