சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் ஸ்டாலின்.. ஒரே கல்லில் 2 மாங்கா.. புதுக்கோட்டையா? சேலமா? கோவையா?.. கதிகலங்கி போயுள்ள புள்ளிகள்

மாஜிக்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பது எப்போது என்ற தகவல் கசிந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் போடும் கணக்குகளை கண்டு திமுகவினரே ஆச்சரியத்தில் உள்ளனர்.. அதிமுக மாஜிக்கள் மீதான புகார்கள் விசாரணை குறித்து மேலும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் முக ஸ்டாலின், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் டைம் எடுத்து பேசினார்.. அந்த திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அப்போது அவர் கேட்கவும் இல்லை.. காரணம், அங்கு பேசியது முழுக்க மாஜிக்களின் ஊழல்களை பற்றிதான்.

"திமுக ஆட்சி அமையட்டும், ஊழல் ஃபைல்களை தூசி தட்டி எடுக்கப்படும், என் முதல் வேலையை இவங்களை உள்ளே தள்ளுவதுதான்" என்று ஸ்டாலின் உறுதிபட சொன்னார்..

முதல்வர் ஸ்டாலின் காரின் முன்பு திடீரென கீழே அமர்ந்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு முதல்வர் ஸ்டாலின் காரின் முன்பு திடீரென கீழே அமர்ந்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு

விசாரணை

விசாரணை

இதற்கு பிறகு, ஊழல் புகார்களை விசாரிப்பதற்காகவே டீமையும் இறக்கினார்.. சேலம், கோவை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை போன்ற தொகுதிகளின் பிரச்சாரங்களில் ஸ்டாலின் என்ன பேசினோரோ, அவைகள்தான் தற்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. இதில், ஊழல் லிஸ்ட் நடவடிக்கையில், ராஜேந்திர பாலாஜியின் பெயர்தான் முதலில் உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

 முறைகேடுகள்

முறைகேடுகள்

அப்படியே அரண்டு போயிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.. தேர்தலுக்கு முன்பு வரை சவுண்டு அதிகமாக கேட்ட நிலையில், இப்போது கப்சிப்பென்று இருப்பதாக தெரிகிறது.. ஒருபடி மேல போய், அப்போ எனக்கு பக்குவம் இல்லை.. இப்போ ஓரளவு அரசியல் பக்குவம் வந்துடுச்சு.. தெரியாமல் பேசிட்டேன் என்ற ரீதியில் வருத்தப்படும் அளவுக்கு நொந்து போயுள்ளதாக தெரிகிறது.

 வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

அதேபோல, விஜயபாஸ்கர் மீதான புகார்களும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. 2 மாதத்துக்கு முன்பேயே வெள்ளைக் கொடியை கையில் எடுத்துவிட்டார் விஜயபாஸ்கர்.. ஆனால், அது எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை.. இதையடுத்து, இவரும் கதிகலங்கியே போயுள்ளார்.. அதேசமயம், தூது முயற்சியையும் கைவிடவில்லை என்கிறார்கள்.

கோட்டை

கோட்டை

இதைதவிர, சேலம் எடப்பாடி பழனிசாமி, தேனி ஓபிஎஸ், கொங்கு மண்டலம் வேலுமணி போன்றோர் அடுத்தடுத்து உள்ளனர்.. ஆனால், எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கின் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது டக்கென அப்படியே அமுங்கி விட்டது.. இத்தனைக்கும் டெல்லி சென்று பிரதமரிடம், மாஜிக்களின் ஊழல் குறித்தும், எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லிவிட்டு தான் வந்தாராம். ஆனால், இப்போது தயக்கத்திற்கு என்ன காரணம்? ஏன் இன்னும் நடவடிக்கை ஆரம்பமாகவில்லை? ஸ்டாலின் என்ன பிளானில்தான் இருக்கிறார்? என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

 நடவடிக்கை

நடவடிக்கை

இப்போது அது சம்பந்தமான விஷயம்தான் கசிந்து வருகிறது.. இதுவரை இந்த மாஜிக்களின் புகார்கள் தொடர்பாக ஓரளவு விவரங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டனவாம்.. ஆனால், அவர்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை வேண்டாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.. காரணம், இப்போது நடவடிக்கை எடுத்தால், கைது நடவடிக்கை வரும்.. ஆனால், ஓரிரு மாதங்களிலேயே பெயிலில் வெளியில் வந்துவிடக்கூடும்.

 மக்கள் மன்றம்

மக்கள் மன்றம்

எனவே, வெளியில் வர முடியாத அளவுக்கு வலுவான ஆதாரங்களை மேலும் திரட்ட வேண்டும், அந்த ஆதாரங்களை மக்கள் சபையில் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும், அதன்பிறகு, ஊழல் தொடர்பானோர் மீது நடவடிக்கை எடுத்தால் அதுதான் இதற்கெல்லாம் நிஜமான தீர்வாக இருக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறாராம். அதாவது, ஏற்கனவே ஊழல் லிஸ்ட்டை ஆளுநரிடம் தந்தாரே, அதுபோலவே பக்காவாக தயாரித்து முழு ஆதாரங்களையும் திரட்ட சொல்லி உள்ளாராம்..

லிஸ்ட்

லிஸ்ட்

இன்னொரு பக்கம் இந்த ஊழல் லிஸ்ட்டை கையில் வைத்து கொண்டே அதிமுகவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றும் திமுக தரப்பு நினைக்கிறதாம் .. அந்த நெருக்கடியால், சில முக்கிய புள்ளிகள் திமுக பக்கம் தாவினாலும், அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணம் திமுக மேலிடத்தில் உள்ளதாம். எப்படியும் இன்னும் ஒருசில வாரங்களுக்கு பிறகே இந்த நடவடிக்கைகள் மாஜிக்கள் மீது பாயும் என்கிறார்கள்.. ஆனால், முதலில் சிக்குவது விருதுநகரா? புதுக்கோட்டையா? கொங்குமண்டலமா? சேலமா? மதுரையா? தெரியவில்லை.. பார்ப்போம்..

English summary
When CM Stalin is going to take action against Ex Ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X