ஆதாரம் இருக்கா? உதயநிதி கேள்வியால் “ஆஃபான” ஆங்கில டிவி ரிப்போர்டர்! இனப்படுகொலை கேள்வியால் ஆவேசம்
சென்னை: இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறதே என கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா என பதில் கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், பேசிய அவர் சனாதனத்தை விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த அவர், "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள். விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.
அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சனாதானம் என்பது கொசு, டெங்கு, புளூ, மலேரியா போன்ற நோய் என்றும் அதை அழிக்க வேண்டும் என்றும், உதயநிதி பேசியதாக கூறி அவர் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகள் பரப்பப்பட்டன.
இது தொடர்பாக அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக பெரும்பாலான இதனை கண்டித்து பேசி வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், இதனை சட்டப்படி எதிர்கொள்வதாக தெரிவித்து உள்ளார். காவிகளின் ட்விட்டர் பதிவுகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், பெரியார், அண்ணா, கலைஞரின் வழிப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். இன்றும், நாளையும், என்றும் சனாதானத்தை எதிர்ப்பு போராடுவேன் எனவும், இந்த எதிர்ப்பில் இருந்து சிறிதும் பின் வாங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஒன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ஆங்கில தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததாக சொல்கிறார்களே என கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமடைந்த உதயநிதி ஸ்டாலின், "நான் எப்போது இனப்படுகொலைக்கு அழைத்தேன். உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா? நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்." என்று ஆவேசமாக கேட்டுவிட்டு நகர்ந்தார்.












Click it and Unblock the Notifications