அக்கவுண்ட்டில் மாத மாதம் ரூ.1000.. "இவங்களுக்கும்" கிடைக்க போகுது.. எப்போ தெரியுமா? தமிழக அரசு மாஸ்
சென்னை : பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியதுமே, தமிழக அரசு மாணவர்களுக்கு குட்நியூஸ் ஒன்றை அறிவித்திருக்கிறது.. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, "தமிழ் புதல்வன்" திட்டம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் "தமிழ் புதல்வன்" (Tamil Pudhalvan) என்ற மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த முறை தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுமைப்பெண்: அதாவது, புதுமைப்பெண் திட்டம்போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும் "தமிழ்ப் புதல்வன்" என்ற திட்டம் வரும் அறிமுகம் செய்யப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும், இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதாவது, அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். இந்த பணத்தில், பாட புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை மாணவர்கள் வாங்கி கொள்ளலாம்..
மேற்படிப்பு: இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னையில் துவங்கியிருக்கிறது.. கடந்த 2022ம் ஆண்டு முதலே, ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது..
இதில், உயர் கல்வி படிப்புகள், கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது? மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் என்னென்ன? என்பது பற்றி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கல்லூரி கனவு நிகழ்ச்சி: நேற்று முன்தினம், பிளஸ் 2 ரிசல்ட் வெளியானதையடுத்து, "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று சென்னையில் துவங்கியது.. 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரி கனவு 2024-ன் மாவட்ட அளவிலான தொடக்க விழா இதுவாகும்.. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும், கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது... இந்த மாவட்டங்களை தொடர்ந்து, மே 13ம் தேதி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில், கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர்: "நான் முதல்வன் கல்லூரி கனவு" 2024 நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பங்கேற்றார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் புதல்வன் திட்டம் குறித்து கூறினார்.
தலைமை செயலாளர் சொல்லும்போது, "தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.. ப்ளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுமைப்பெண்: புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளன. தமிழக அரசின் முயற்சியால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20 - 25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..
வரும் ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.. உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும்.. இது போன்ற திட்டங்களால் உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் என்றார் தலைமை செயலாளர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications