இந்திரகுமாரியின் இழப்பு.. திரண்டு மலரஞ்சலி செலுத்தும் திமுகவினர்.. இன்று சென்னையில் இறுதிச்சடங்கு
சென்னை: தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரியின் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. இன்றைய தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
புலவர் இந்திரகுமாரி அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர்... 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

அதிமுக: அதிமுக சார்பில் போட்டியிட்ட இந்திரகுமாரி, நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானவர். 2006ம் ஆண்டு இவர் திமுகவில் இணைந்தார். ஊழல் வழக்கில் இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது... இதைத்தவிர இந்திரகுமாரி மீது பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதாகவும் ஊழல் வழக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், திமுகவில் இணைந்ததுமே, இந்திரகுமாரிக்கு இலக்கிய அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரகுமாரி, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
சிறுநீரக பாதிப்பு: சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை மரணம் அடைந்தார். உயிரிழந்த இந்திரகுமாரிக்கு வயது 74.
தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திரகுமாரி என்றால் மிகையல்ல.. இவரது கணவர்
பாபு வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு லேகா சந்திரசேகர் என்ற மகள் உள்ளார்.
அஞ்சலி: இந்திரகுமாரின் உடல் அஞ்சலிக்காக அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. இன்றைய தினம் அவரது இறுதி சடங்கு பெசன்ட்நகரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் இரங்கல்: இந்திரகுமாரியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. "திமுக இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி, மறைந்த துயர செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர். தீராத தமிழ் புற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர்.
அவரது மறைவு தி.மு.க.வுக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்இந்திர குமாரியை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புகளுக்கு என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிதெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications