சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. ஆமா, இதென்ன புதுசா முளைச்சிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் - நெல்லை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நாளை 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.

When is Chennai Nellai Vande Bharat Train Reservation Start and Railways Major announcement

முன்னதாக, அந்த ரயில், எங்கெல்லாம் ரயில் நிற்கும் என்ற லிஸ்ட்டையும் வெளியிட்டிருந்தது. அதில், சென்னையை விட்டால், அத்துடன், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. சென்னையில் தாம்பரத்தில் நெல்லை வந்தே பாரத் நிற்காது என்பது, சென்னை மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது..

தாம்பரம் குட்நியூஸ்: காரணம், தென்மாவட்ட மக்கள் பலரும் தெற்கு ரயில்வேயிடம் தாம்பரத்தில் வந்தே பாரத் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையும் தற்போது ஏற்கப்பட்டு, நெல்லை வந்தே பாரத் ரயில் தாம்பரத்திலும் நிற்கும் என்று அறிவித்துள்ளது.

இதனிடையே, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் 1400 முதல் 1500 வரை வசூலிக்கலாம் என தெரிகிறது. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ 3000 வரை டிக்கெட் விற்பனை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இதைத்தவிர, உணவு வேண்டுமானால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமாம்..

அதாவது, இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8.. ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. AC வகுப்பு 3205 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும் என்றாலும், சென்னை - நெல்லை சென்றடைய சராசரியாக 11 மணி நேரம் வரை ஆகும் நிலையில், இப்போது, வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்திற்கு உள்ளாகவே சென்று சேர்ந்துவிடும் என்பதால்தான், இந்த ரயிலின் மீதான எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

முன்பதிவு எப்போது: நாளைய தினம் பிரதமர் மோடி இந்த ரயிலின் சேரவையை துவக்கி வைக்க உள்ள நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது..

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "சென்னை எழும்பூர் - திருநெல்வேலி உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஓரிரு நாளிலேயே துவங்கிவிடும். இந்தசேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது உத்தேச கட்டணங்கள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும்.. இப்போதைக்கு இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வைகோ: இதற்குநடுவே, இந்த வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்பதே தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது..

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து இது சம்பந்தமான கோரிக்கைகளை விடுத்து வருகிறார்.. அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், கோவில்பட்டியில் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுமிருக்கிறார்.

கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு கோரிக்கையும் புதிதாக முளைத்துள்ளது.. அதாவது, இந்த வந்தே பாரத் ரெயிலை நெல்லையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்துவதற்கு ஆசைப்படுகிறார்கள்.. அதனால், அவர்கள் நெல்லை சந்திப்புக்கு காலை 6 மணிக்குள் வந்து சேருவதில் சிரமங்கள் இருப்பதால், இந்த ரயில் புறப்படும் நேரத்தை 6 மணிக்கு பதில், காலை 7 மணிக்கு மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நெல்லைக்கு திரும்பி வருவதற்கு நள்ளிரவு ஆகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இந்த கால விரயத்தை தவிர்க்க சென்னை எழும்பூரில் ரெயில் நிறுத்தி வைக்கும் நேரத்தை குறைத்து, இப்போது திட்டமிட்டுள்ளபடி மதியம் 2.50 மணிக்கு ரெயில் புறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்த துவங்கி உள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+