1 சொல்.. "அந்த" 15 நிமிஷம்.. டோட்டலா சேஞ்ச் ஆகுதே.. அதென்ன எடப்பாடி கையிலே.. மோடி என்ன சொல்ல போறாரோ?
சென்னை: இன்றைய தினம் சென்னை வரும் பிரதமர் மோடியை, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக சில பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன..!!
கடந்த ஒரு மாத காலமாகவே, தமிழக பாஜக - அதிமுக இடையே சலசலப்புகளும், முணுமுணுப்புகளும் மாறி மாறி வெடித்து வந்தநிலையில், கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியை உறுதி செய்து பேசியிருந்தார்..

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
கூல் தலைவர்: இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த அதிருப்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், பாஜக - அதிமுக கூட்டணியை உறுதி செய்து பேசி, அதிமுக மேலிடத்தை "கூல்" செய்திருந்தார்.. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் இதில் மாறுபட்டே வருகிறார்.. அவரது தேர்தல் கணக்குகளும், வியூகங்களும் அதிமுகவுக்கு எதிரான மனநிலைமையை வெளிப்படுத்தினாலும், பாஜகவின் வளர்ச்சியை முன்னிறுத்துவதாகவே அமைந்து வருகிறது.
சீக்ரெட் விஷயம்: இப்போது விஷயம் என்னவென்றால், சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.. அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை பழனிசாமி, ஓபிஎஸ் வரவேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, முதல்முறையாக பிரதமரை சந்திக்கபோவதால், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
15 நிமிஷம்: ஆனால், இப்போது அதுதொடர்பாக வேறு சில தகவல்கள், நம் "ஒன் இந்தியா" தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. அதாவது, பிரதமரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லையாம்.. வழியனுப்பிவைக்கதான் செல்கிறாராம்.. அதுவும் இல்லாமல் வெறும் 15 நிமிடத்தான் பிரதமரை சந்திக்க "டைம்" கிடைத்துள்ளதாம்.. இன்று சென்னை வரும் பிரதமர், தன்னுடைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று இரவே கிளம்புகிறார். அவரை வழியனுப்பி வைக்க வரும் விஜபிகளில் எடப்பாடிக்கும் இடம் இருக்கிறது. இந்த சந்திப்பின்போது, மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச எடப்பாடிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன...

ரகசிய ஃபைல்: இந்த 15 நிமிடத்தில் தான் பேச வேண்டியதை முழுமையாக பேசிவிட முடியுமா? என்ற கேள்வி எடப்பாடிக்கு இருப்பதால், மோடியிடம் தெரிவிக்க வேண்டிய பல விஷயங்களை ஒரு கடிதமாக கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். அதனால், மோடியிடம் சந்திக்கும்போது ஒரு ஃபைலை எடப்பாடி தருவார் என்கிறார்கள். அதில் தங்களுக்கு எந்தளவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்பதை தெளிவுப்படுத்துவதுடன், ஓபிஎஸ்-சசிகலா-தினகரன் மூவரும் அதிமுகவினரால் வெறுக்கப்பட்டுள்ளனர் என்பதை அழுத்தமாக அந்த கடிதத்தில் சொல்லப்படுமாம்.
இதைதாண்டி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி குறித்த சில புள்ளிவிபரங்களையும் சுட்டிக்காட்டவிருக்கிறார் என்று அதிமுக தரப்பில் பேசப்படுகிறது. அதேசமயம், மோடி-எடப்பாடி சந்திப்பின் போது, "பொதுச்செயலாளராக தன்னை அதிமுக தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உதவ வேண்டும் என்றும், கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு 3 சீட் தரவேண்டும் என்றும் கேட்கவிருக்கிறார் எடப்பாடி.
ஆனால், கர்நாடக தமிழர்களிடம் அதிமுகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற புள்ளிவிபரங்களை மோடி தெரிந்து வைத்திருப்பதால், "இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம். பாஜவை ஆதரியுங்கள்" என்று மோடி கட் அட் ரைட்டாக பேசுவார் என்று தெரிகிறது.. அதனால் ஏற்படும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " அதிமுகவுக்கு அட்லீஸ்ட் 1 சீட்டாவது ஒதுக்குங்கள்" என்று கேட்கும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதாவது, லட்சியம் 3 சீட், இல்லாவிட்டால் நிச்சயம் 1 சீட் என்ற முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி. எதுவானாலும் இதுகுறித்த முடிவு அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள். என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications