தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? கட்டம் கட்டப்படும் பெரிய "தலை".. ஸ்டாலினின் அதிரடி.. பாஜக ஜெயிச்சிருமோ?
சென்னை: தேர்தல் முடிவுகள் வந்ததுமே, திமுகவில் சில முக்கிய மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த முறை தேர்தல் போல அசால்ட்டாக விட்டுவிடாமல், இந்த முறை அனைத்து தொகுதிகளிலுமே வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருந்து வருகிறார்.

பிரச்சாரங்கள்: அதனால்தான், தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தபோதும்கூட, மறுபக்கம் அனைத்து தொகுதிகளிலும் போனை போட்டு, தேர்தல் பொறுப்பாளர்களிடம் நேரடியாகவே நிலவரத்தை விசாரித்து கொண்டிருந்தார் ஸ்டாலின்.. அதேபோல, அனைத்து அமைச்சர்களையும், மா.செ.க்களையும் தொடர்புகொண்டு இறுதிக்கட்ட நிலவரத்தையும் விசாரித்திருக்கிறார்.
காரணம், இதற்கு முன்பாக தமிழக உளவுத்துறையிடமிருந்து ஒரு ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு தரப்பட்டிருந்தது.. அதில் சொல்லப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை ஸ்டாலின் நடத்தியிருந்தார்..
அண்ணாமலை: முக்கியமாக, பாஜகவின் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், கறுப்பு முருகானந்தம், ராமலிங்கம், சௌமியா அன்புமணி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுதிகளான, கோவை, நீலகிரி, நெல்லை, தஞ்சை, நாமக்கல், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி ஆகிய தொகுதிகளின் கடைசிக்கட்ட நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது என அதிக நேரம் விசாjித்தாராம் ஸ்டாலின்.
இந்த தொகுதிகளில் திமுக (கூட்டணி கட்சியும் இதில் அடங்கும்) தான் ஜெயிக்கும் என்று பொறுப்பு அமைச்சர்களும் உறுதி தந்திருந்தார்கள்.. ஆனால், மேற்கு மண்டலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும்தான் சற்று இழுபறி என்று சொல்லப்பட்டதாம். இதற்கு பிறகுதான், கோவை மற்றும் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம், கடைசி 3 நாட்களில் கூடுதல் கவனம் போடுங்கள் என்று வலியுறுத்தியிருந்தார் ஸ்டாலின்.
அனிதா: அதேபோல, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி, நெல்லை என 2 தொகுதிகளிலும் பொறுப்பை ஒதுக்கியதுடன், "தேனிக்கு தரும் முக்கியத்துவத்தை மதுரைக்கும் கொடுங்கள், இந்த முறை மதுரை ஜெயித்தே ஆக வேண்டும்" அமைச்சர் மூர்த்தியிடமும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தாராம்.
இப்படி ஏகப்பட்ட அதிரடிகளை தேர்தலின் இறுதிக்கட்ட நாட்களிலும் ஸ்டாலின் முன்னெடுத்தபடியே இருந்தார்.. இப்போது தேர்தலும் முடிந்துவிட்டது.. திமுக அமைச்சர்கள், திமுக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபடி இருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மட்டும் நேற்று வரை ஸ்டாலினை சந்திக்கவில்லையாம். அதேபோல, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, அக்கட்சியின் வேட்பாளர்கள் யாரும் சந்திக்கவில்லை.
வாக்கு வித்தியாசம்: தன்னை சந்தித்தவர்களிடம் வெற்றி வாய்ப்பு எப்படி ? வாக்கு வித்தியாசம் எவ்வளவு வரும் ? எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் போகுமா? என்றெல்லாம் விசாரிக்கிறார் ஸ்டாலின். 200 % நமக்குத்தான் வெற்றி என்றும், 40-க்கு 40-ம் ஜெயிப்போம் என்றும், முந்தைய தேர்தலைவிட வாக்குகள் அதிகம் பெறுவோம் என்றும் அவர்கள் சொல்வதைக் கேட்டு உற்சாகமாக இருக்கிறாராம் ஸ்டாலின்.
அதேசமயம், உளவுத்துறையும், சபரீசனின் "பென்" அமைப்பும் கொடுத்துள்ள ஃபைனல் ரிப்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையிலும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்கிறார் ஸ்டாலின். அதற்கு சில அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் சுத்தி வளைத்து பதில் சொல்லி சமாளித்துள்ளனர்.
உதறல்கள்: அவர்களிடம் மட்டும், "ஆரம்பத்தில் நான் சொன்னதுதான்... வெற்றி வாய்ப்போ, வித்தியாசமோ குறைந்தால் சீரியசாக நடவடிக்கை எடுப்பேன். மன்னித்து விட்டுவிடுவேனென்று மட்டும் நினைத்து விடாதீர்கள் " என்று தனது முடிவில் மாற்றம் இல்லை என்பதை அழுத்தமாக புரியும் வகையில் வெளிப்படுத்தினாராம் ஸ்டாலின். இதனால் அமைச்சர்கள் சிலருக்கு இப்போதே உதறல் எடுத்திருக்கிறதாம்.
இந்த நிலையில், ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி வலியுறுத்தியிருக்கிறாராம்.
ஸ்டாலின்: அது மட்டுமல்ல, தேர்தலிலும் அமைச்சர் பணியிலும் ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்களிடமிருந்து மா.செ.பதவிகளும் பறிக்கப்படலாம். அதாவது அமைச்சர் பதவியா ? அல்லது மாவட்ட செயலாளர்? இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்ளுங்கள் என கறாராக சொல்லிவிட்டு, அதன்படி ஆக்ஷன் எடுக்கவும் தலைவர் (ஸ்டாலின்) தயாராகி வருகிறாராம்.
அதேசமயம், தேர்தலில் ஸ்டாலின் எதிர்பார்த்த ரிசல்ட்டை தரும் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிபோகாது என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.
பரபரப்பு: இதற்கிடையே, தேர்தல் செலவுக்கென கட்சி தலைமை கொடுத்த பணம் விவகாரம் குறித்தும் ஒரு ரிப்போர்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முழுமையான ரிப்போர்ட் ஸ்டாலினிடம் கொடுக்கப்படும் போது கட்சியின் மா.செ.க்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு மண்டகப்பொடி நிறைய விழும்" என்றும் நம்மிடம் சொல்கிறது திமுக வட்டாரம்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications