KB Sundarambal: கே.பி.சுந்தராம்பாள் வீட்டிற்கு வந்த காந்தி! தங்கத்தட்டில் உணவு! மகாத்மா கேட்ட கேள்வி
சென்னை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கே.பி.சுந்தராம்பாள் (K.B.Sundarambal / KBS Theatre) வீட்டிற்கு தேசபிதா மகாத்மா காந்தி வந்திருந்த போது அவருக்கு தங்கத் தட்டில் உணவு அளித்ததுடன் அவருக்கு அதை பரிசாகவும் அளித்திருந்தாராம். கொடுமுடியில் கேபிஎஸ் திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ள நிலையில் சுந்தராம்பாள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள். சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து நாடகங்களில் நடித்து பின்னாளில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த அறிஞர் அண்ணாவால் கொடுமுடி கோகிலம் என அழைக்கப்பட்டார்.

அதாவது கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (Kodumudi Balambal Sundarambal - K.B. Sundarambal) என்பது அவருடைய முழு பேராகும். கொடுமுடியில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தார். இவருடைய குடும்ப வறுமை காரணமாக ரயில்களில் பாட்டு பாடி யாசகம் பெற்றார். அப்போது இவரது குரல் வளத்தை கண்டு மெச்சிய நடேச ஐயர் என்பவர் தனது சொந்த செலவில் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டார்.
நாடகத் துறை
இதன் மூலம் நாடகத் துறையில் பவளக் கொடி, கோவலன், நல்லதங்காள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தார். பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்டார்.
ரூ 1 லட்சம் சம்பளம்
நாடக நடிகையான சுந்தராம்பாள் "பக்த நந்தனார்" என்ற படத்தின் மூலம் திரை பிரவேசம் செய்தார். திரைத்துறையிலும் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அவரது முதல் படமான பக்த நந்தனாருக்கு 1935 ஆம் ஆண்டிலேயே ரூ 1 லட்சம் ஊதியமாக பெற்றார்.
25 வயதிலேயே விதவை
ஆனாலும் சுந்தராம்பாள் தனது 25 வயதிலேயே, அதாவது திருமணம் செய்த 6 ஆண்டுகளில் கணவரை இழந்து விதவைக் கோலம் பூண்டார். அது முதல் வெள்ளைச் சேலை அணிந்திருந்தார். மேலும் எந்த நடிகருடனும் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சபதம் செய்திருந்தார்.
பழம் நீயப்பா
தனது வெங்கல குரலால் "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா, "அரியது, அரியது" போன்ற பாடல்களை பாடினார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கே.பி.சுந்தராம்பாளின் வீட்டிற்கு ஒரு முறை மகாத்மா காந்தியடிகள் வருகை தந்து உணவு சாப்பிட்டாராம்.
தங்கத் தட்டில் விருந்து
அப்போது அவருக்கு தங்கத்தட்டில் கே.பி.சுந்தராம்பாள் உணவு அளித்தாராம். காந்தியடிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த தங்கத்தட்டை காந்திக்கு பரிசாகவும் கொடுத்தார். பின்னாளில் அந்த தட்டை ஏலமிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திர போராட்டங்களுக்கு காந்தியடிகள் பயன்படுத்திக் கொண்டாராம்.
கொடுமுடி தியேட்டர்
1968 ஆம் ஆண்டு கொடுமுடியில் கேபிஎஸ் திரையரங்கம் என்பதை தொடங்கினார். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இந்த தியேட்டரை முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் வந்து, சுந்தராம்பாள் வீட்டில் தங்கியிருந்து தியேட்டரை திறந்து வைத்தனராம்.
கொரோனா லாக்டவுன்
இந்த தியேட்டர் கொரோனா லாக் டவுன் வரை நன்றாக வருவாய் ஈட்டி தந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸாகவில்லை என்பதால் இந்த தியேட்டரை இடிக்க தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 56 ஆண்டுகள் கழித்து இந்த தியேட்டர் தரைமட்டமாக்கப்பட்டது. கொடுமுடியில் முதல் முறையாக தொடங்கிய தியேட்டர் தற்போது தரைமட்டமானதை பார்க்கும் ரசிகர்கள் மனவேதனையில் உள்ளனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications