கருணாநிதி துவக்கி வைத்த பொங்கல் பரிசுப் பொருள்! ஜெயலலிதா துவக்கி வைத்த பொங்கல் பணம்! ஃபிளாஷ்பேக்!
சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுப்பொருள் தொகுப்பு பை தான் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பேசு பொருளாக இருந்து வருகிறது.
பொங்கல் பரிசுப் பொருள் பை வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்த நிலையில் அந்த பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையோடு பணம் கொடுக்கும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதனால் அவர்கள் இருவருக்குமே இந்த பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் முக்கிய இடமிருக்கிறது.

திமுக ஆட்சி
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டே இந்த திட்டத்தை தொடங்கி வைக்க விரும்பிய கருணாநிதி, அதிகாரிகளின் இழுத்தடிப்பு காரணமாக 2009-ம் ஆண்டு பொங்கல் முதல் இந்த கவர்ச்சிக்கர திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அரைகிலோ பச்சரிசி, அரைகிலோ வெல்லம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, தலா 25 கிராம் என்ற அளவில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரை
2009, 2010, 2011, என மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இந்த திட்டம் 2011-மே மாதம் அதிமுக ஆட்சி அமைத்த பிறகு 2012-ம் ஆண்டு கைவிடப்பட்டது. பிறகு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மக்களிடம் இருந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உளவுத்துறை மூலம் அறிந்த ஜெயலலிதா மீண்டும் 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு பொங்கல் பரிசுப் பொருள் தொகுப்பு பைகளை நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கினார்.

ஒரு படி மேலாக
இதில் விசேஷம் என்னவென்றால் திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அரைகிலோ என்ற அளவிலான பொருட்களை ஒரு கிலோவாக மாற்றியதுடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான இதர பொருட்களை வாங்க ரூ.100 -ஐ ரொக்கமாக மக்களுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஜெயலலிதா. இது அப்போது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக அமைந்திருந்தது. 2013, 2014 என இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டம் 2015-ம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது.

பணம் இல்லை
இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு மீண்டும் 2016-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனிடையே 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த சில மாதங்களில் ஜெயலலிதா காலமானார். அந்த தருணத்தில் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொடுக்கமாட்டார் என எதிர்க்கட்சிகள் கணித்தன. ஆனால் அந்த கணிப்புகளை பொய்யாக்கி 2017-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் தொகுப்பு பைகளை மட்டும் வழங்கினார். பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகள்
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும் பொங்கல் பரிசுப் பொருட்களை மட்டுமே 2018-ல் வழங்கினார். இந்நிலையில் 2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த ஆண்டின் ஜனவரி மாதம் பொங்கல் பரிசுப் பொருட்களோடு ரூ.1000-ஐ ரொக்கமாக அளித்து மக்களை திக்குமுக்காட செய்தார். இதேபோல் 2020-ம் ஆண்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தல்
இதனிடையே அதிமுக ஆட்சி முடியும் தருவாயில், அதாவது 2021 பொங்கல் பண்டிகைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கல் பரிசுப் பொருட்களோடு குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு தலா ரூ.2500 வழங்கி மீண்டும் கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா என்கிற அளவுக்கு மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இது சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கொடுக்கப்படும் பணம் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்தச் சூழலில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக -அதிமுக
பொங்கல் பரிசுப்பொருள் திட்டத்தை பொறுத்தவரை கருணாநிதியால் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது என்பது வரலாறு. அதேபோல் அந்த திட்டத்தை மேலும் மெருகேற்றி அதில் பல மாற்றங்களை செய்தது ஜெயலலிதா என்பதும் வரலாறு. இதனால் அவர்கள் இருவருக்குமே இந்த பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் முக்கிய இடமிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications