"எங்களை சீண்டாதீங்க.. நாங்க ஆட்சிக்கு வந்தா காவல் நிலையமே இருக்காது”- பாஜக நிர்வாகி பகிரங்க மிரட்டல்
அரியலூர்: "நாங்க ஆட்சிக்கு வந்ததும் இங்கு காவல் நிலையமே இருக்காது. அரசு அதிகாரிகளோ.. போலீஸ்காரர்களோ.. எங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்" என பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் பகிரங்க மிரட்டல் விடுத்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொகுதி பங்கீடு என தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான அய்யப்பன் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திடீரென போலீசார் அரசு அதிகாரிகளைக் கண்டித்து அவ பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அய்யப்பன் பேசுகையில், "அனைவரும் திமுகவை தீயசக்தி என்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளை கூறுகிறேன். பெண்கள் இந்த கூட்டம் முடிந்து பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால், குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சூழல் நிலவுகிறது. சங்கிலி பறிப்பு நடக்கிறது. காவல்துறைக்கே பாதுகாப்பு கிடையாது.
ஆனால், காவல்துறையினர் இங்கே கூட்டம் போடாதே, அங்கே போடாதே என்று நம்மிடம் தான் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பேசுவார்கள். இன்னும் இரண்டே மாதம் தான். திமுக ஆட்சி முடிஞ்சு போச்சு. அதன்பிறகு அதிமுக தலைமையிலான பாஜக தான் ஆட்சிக்கு வரும்.
அப்போது, தா.பழூரில் காவல் நிலையமே இருக்காது. கூண்டோடு கலைத்து வெளியூருக்கு அனுப்பி வச்சுருவோம். ஆகையால், அரசு அதிகாரிகளோ? போலீஸ்காரர்களோ? எங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்" என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications