நடிகர் விஜயின் அரசியல் பயணம் எப்போது? வந்து விழுந்த கேள்வி.. புஸ்ஸி ஆனந்த் ரியாக்சன் என்ன தெரியுமா?
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் அடுத்த பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறது என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று பரபரப்பான கூறினார். இந்த சமயத்தில் அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் பயணம் எப்போது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு புஸ்ஸி ஆனந்த் கொடுத்த ரியாக்சன் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.

இதையடுத்து நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தான் சமீபத்தில் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் மதிப்பெண்ணில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார்.
மேலும் ‛பணம் வாங்கி கொண்டு மக்கள் ஓட்டுப்போட கூடாது. உங்கள் குடும்பத்தினரையும் ஓட்டு பணம் வாங்க விடக்கூடாது' என அவர் அட்வைஸ் கூறினார். அதோடு அம்பேத்கர், காமராஜர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறினார். இந்த பேச்சு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்குள் நுழையலாம் என்ற தகவல்கள் பரவ தொடங்கின.
மேலும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து அணி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங்க் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ‛‛யார் என்ன சொன்னாலும் சரி. நாம் மற்றவர்களை ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் விமர்சனம் செய்யக்கூடாது. நாகரீகமான முறையில் தான் பதிலடி கொடுக்க வேண்டும். மேலும் ஐடி விங்க்கை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கினார். இதையடுத்து கூட்டத்தின் முடிவில், புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛விஜய் மக்கள் இயக்கம் அடுத்த பரிணாமத்தை நோக்கி பயணிப்பதாக கூறுகிறீர்கள். அடுத்த பரிணாமம் என்பது அரசியல் பயணமா'' என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு புஸ்ஸி ஆனந்த், ‛‛அடுத்த பரிணாமம் என்பது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். இது தான் விஜயின் விருப்பம். அதன்படி சேவைகள் செய்து வருகிறோம். நல்ல விஷயங்கள் செய்வதை வலைதளம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது'' என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛இந்த நடவடிக்கைகள் அரசியல் வடிவமாக எப்போது மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு புஸ்ஸி ஆனந்த் சிரித்தப்படியே, ‛வரேன்' என கூறிவிட்டு புறப்பட்டார். இந்த வீியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications