எடப்பாடியே எதிர்பார்க்கலை.. அவங்க "இங்கே" வர்றாங்களாமே.. லிஸ்ட் ரெடியாகுது.. போச்சுடா
எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவாரா
சென்னை: முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை அள்ள எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு போட்டிருந்தால், அவருக்கே அதிர்ச்சி தருவதுபோல இன்னொரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறதாம்..!!
எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருந்தபோதே, சாதிய ரீதியான தோற்றமே அவர்மீது படிந்துவிட்டது..
ஓபிஎஸ் ஒரு பக்கம், எடப்பாடி மறுபக்கம் என தெற்கு + கொங்கு என ஆட்சி காலத்தில் தங்கள் அதிமுக அரசியலை செய்து வந்தனர்.. 4 ஆண்டு காலம் ஓரளவு இணக்கமாக இவர்கள் சென்றாலும், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில், 2 தலைவர்களிடமும் அதிருப்திகள் மெல்ல வெடித்தன.

தவிர்ப்பு
அந்த நேரத்தில்தான், தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. சசிகலா உட்பட ஓபிஎஸ் டீம் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் பசும்பொன்னுக்கு நேரடியாக சென்று தேவர் சிலைக்கு மாலை போட்டு வந்தார்கள்.. ஆனால், உடல்நிலை காரணம் காட்டி, பசும்பொன்னுக்கு போகாமல் எடப்பாடி தவிர்த்தார்.. ஓபிஎஸ் + சசிகலா இருவரையுமே நேரில் சந்திக்க நேரிடும் என்பதாலேயே இந்த பயணம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி அங்கு செல்லாதது, அச்சமூகத்தினரிடையே, அதிருப்தியையே பெற்று தந்தது..

மாயத்தேவர்
ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், தேவர் ஜெயந்திக்கும் வராமல் போனது, தென்மண்டலத்தில் அதிருப்தியை கூட்டியது.. அதேபோல, மாயத்தேவருக்கும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை.. எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்த, அந்த தேவர் ஜெயந்தி வாய்ப்பு எந்த அளவுக்கு சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு உதவியதோ, அதுபோலவே மாயத்தேவருக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி செல்லாததையும் தங்களுக்கு சாதகமாக ஓரளவு பயன்படுத்தி கொண்டது என்றே சொல்லலாம்.

குளிருமா
இப்போது மீண்டும் தேவர் ஜெயந்தி வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. ஏற்கனவே, ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக, தென்மண்டல வாக்குகளை அள்ளுவதற்காகவும், அச்சமூக மக்களின் மனதை குளிர வைப்பதற்காகவும்தான் பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கும் தந்தார்.. அதற்கு பிறகு வேறு சில அதிரடிகளையும் மேற்கொள்ள போவதாக சொன்னார்கள்..

சிலை + தலை
ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன்பே, தெற்கில் சுற்றுப்பயணத்தை துவங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்ததுடன், இறந்து போன அந்தந்த சமூக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துவது, அந்த தலைவர்களின் சேவையை எடுத்துரைப்பது, போன்றவைகளை செய்து, முக்குலத்தோர் சமுதாயத்தை கவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..

மாஸ் ப்ளான்
இப்படி ஒரு மாஸ் பிளானை போட்டுக்கொண்டிருந்தால், எல்லாமே நொறுங்கும்படியான, ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தென் மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் சில நாட்களாகவே சைலண்ட்டாக இருக்கிறார்களாம். அவர்கள் ஓபிஎஸ்ஸை விமர்சிப்பதே கிடையாதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, எடப்பாடி பழனிசாமி ரொம்பவே டென்ஷனாகி உள்ளாராம்.. அவர்கள் யார் யார் என்பதை லிஸ்ட் எடுக்கவும் சொல்லி உள்ளாராம்.. ஆக, அடுத்த அதிரடி அதிமுகவில் தயாராகி வருவதாக தெரிகிறது..!!
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications