சென்னை- நெல்லை வந்தே பாரத் இன்று இல்லாவிட்டால் எப்போது இயக்கப்படும்? ரெக்கை கட்டி பறக்கும் வதந்திகள்
சென்னை: சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இன்று முதல் தொடங்குவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது. அப்படியென்றால் எப்போதுதான் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும் என்பது குறித்து மீண்டும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
வந்தே பாரத் எனப்படும் அதிவிரைவு ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இதனால் இதற்கு நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது. இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளத்தை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என தெரிகிறது.
சூப்பர் பாஸ்ட் ரயில்கள் மூலம் மேற்கண்ட வழித்தடத்தில் 10 மணி நேரம் பயணிக்கப்படும். வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை டூ பெங்களூர், சென்னை டூ கோவை ஆகிய இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 3ஆவது ரயிலாக தென் மாவட்டங்களை இணைக்கும் சென்னை- நெல்லை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது இன்று முதல் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த தகவல்களை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது. மேலும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு வேளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications