கசியும் மேட்டர்.. 27-ம் தேதிக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பா?.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
சினிமா தியேட்டர்கள் எப்போது திறப்பார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது
சென்னை: தியேட்டர்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும்நிலையில், தமிழகத்தில் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..!
தற்போது தொற்று 2வது அலை பரவிவரும் நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அது மேலும் நீட்டிக்குமா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்படுமா? அந்த தளர்வுகளில் தியேட்டர் திறப்பதற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் மறுபடியும் மூடப்பட்டன.. மறுஉத்தரவு வரும்வரை தியேட்டர்களைத் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்கு தயாராக உள்ள பல புதிய படங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.. இதனால் பல்வேறு புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கிறது..

தாக்கம்
பக்கத்து மாநிலம் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை... தமிழகத்தில் கட்டுக்குள்தான் இருந்தாலும், கேரளாவின் பாதிப்பு தமிழகத்தை தாக்குமோ? 3 அலை பரவலுக்கான பாதிப்பும் இருக்குமோ என்ற கலக்கம் சூழ்ந்து வருகிறது.. இந்த சமயத்தில் தியேட்டர்களை திறந்தால் இன்னும் தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சமும் இருப்பதால்தான், தியேட்டர்களை திறக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கவலை
இப்படித்தான், தொற்று ஓரளவு குறைந்ததால், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.. ஆனால், மக்கள் தியேட்டர்களுக்கு வரவே இல்லையாம்.. இதுதான் இங்குள்ள கவலையாகவும் உள்ளது.. அதேசமயம், தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தனர்.

லாக்டவுன்
நாளைய தினம் முதல்வர் தலைமையில் லாக்டவுன் நீட்டிப்பு குறித்த ஆலோசனை நடக்க உள்ளது.. வரும் 23-ம்தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகள் அல்லது மேலும் சில தளர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.. அந்த வகையில் தியேட்டர்கள் குறிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகுமா
அதேசமயம், வரும் ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு பிறகு மறுபடியும் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் அரசுக்கும், திரையரங்க ஓனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... எதுவானாலும் 2 நாளில் தெரிந்துவிடும்..!












Click it and Unblock the Notifications