ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? அப்போலோ மருத்துவமனையில் தொடரும் 3வது நாள் சிகிச்சை!
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் 3வது நாளாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் நலமாக இருக்கிறார். இதற்கிடையே தான் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? என்று திமுகவினர் காத்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. லேசான தலைசுற்றலால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது.
இதையடுத்து நேற்று 2வது நாளாக முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு தேனாம்பேட்டை அப்போலோவுக்கு நேற்று காலையில் முதல்வர் ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் காரில் அமர்ந்து மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பரிசோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் அவர் கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்டாலின் இருக்கிறார்.
இந்நிலையில் தான் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஸ்டாலினை மருத்துவமனையில் சந்தித்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இன்று (நேற்று) காலையில் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை அளிப்பார்கள். முதல்வர் நலமுடன் இருக்கிறார். 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்'' என்று கூறினார்.
இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார் என்று திமுகவினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளை தொடர்கிறேன் என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த பதிவில், ‛‛மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டப்படி நடைபெறுகிறதா? நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீரவு காணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களை தலைமை செயலளரிடம் கேட்டறிந்து மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனே்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications