சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசுக்கு தர்மசங்கடம்.. பார்த்து பார்த்து பிளான் போட்டும் சொதப்பிய "'டெல்லி".. அடுத்து எப்போது?

ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அறிவித்த 1000 ரூபாய் பணம் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம், பரவலாக எழுந்து வந்த நிலையில், அது குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக அறிவித்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மிகப்பெரும் கவனத்தை பெற்றது... ஆனால், ஆட்சி அமைத்ததும் இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை..

இதற்கு பிறகு, தமிழகத்தில் தொற்று குறைந்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது..

ஆயத்த நிலையில் தமிழகம்.. கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்ஆயத்த நிலையில் தமிழகம்.. கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

 பட்ஜெட்

பட்ஜெட்

எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் நவம்பரில் நடத்த உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றிவிடும் என்றும், அநேகமாக நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே அறிவிப்பு வெளியாகவில்லை. இதை எதிர்க்கட்சிகள் இப்போது வரை கேள்வி எழுப்பி கொண்டே இருக்கின்றன.. நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி இதை குற்றச்சாட்டாகவே செய்தியாளர்களிடம் முன்வைத்திருந்தார்.

அதிருப்தி

அதிருப்தி

இதனிடையே, தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மீண்டும் 1000 ரூபாயை முதல்வர் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் சில வாரங்களுக்கு முன்பு கசிந்தன.. இந்த திட்டத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று திமுக அரசு கணக்கு போட்டதாம்.

 பரிசுதொகை

பரிசுதொகை

அப்படி செய்தால் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றியது போல் இருக்கும், பொங்கலுக்கும் பரிசு தொகை தந்தது போல இருக்கும் என்று யோசித்ததாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால், முன்கூட்டியே இத்தகைய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது திமுகவுக்கு சாதகமான முடிவுகளையே பெற்று தரும் என்றும் நம்பப்பட்டது.

 மத்திய அரசு

மத்திய அரசு

அதனால்தான், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழர் திருநாளில் துவக்கி விட பகீரதபிரயத்தனம் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையும், மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையையும் கேட்டு மத்திய அரசிடம் 3 முறை கோரிக்கை வைத்திருந்தாராம்.. எப்படியும் அது கிடைத்து விடும், அந்த தொகை கிடைத்தால் இல்லத்தரசிகளுக்கான திட்டத்தை துவக்கி விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தாராம்.

Recommended Video

    இன்றைய சட்டமன்றம்: நீட்டுக்கு எதிரான போராட்டம் தொடரும்.. Stalin உறுதி
     கிடப்பில் திட்டம்

    கிடப்பில் திட்டம்

    ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் இல்லத்தரசிகளுக்கான திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.. இப்போதைக்கு இது ஒரு தர்மசங்கடமான நிலை என்றாலும், மத்திய அரசுடன் தற்போது மென்மை போக்கை கடைப்பிடித்து வருவதால், நிச்சயம் தமிழகத்துக்கான வர வேண்டிய அனைத்து நிதிகளையும் திமுக அரசு பெற்று விடும் என்றும், அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிவிடுவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது..!

    English summary
    When will DMK Government start a scheme to provide Rs 1000 per month to family heads
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X