தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது?.. பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு எத்தனை நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.

முதலில் மொழிப்பாடத்திற்கு பின்னர் அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன.

When will Half yearly Exam holiday starts in Tamilnadu?

வினாத்தாள்களை ஆசிரியர்களோ பணியாளர்களோ செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறைக்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த 9 நாட்கள் விடுமுறையில் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு ஆகியவை பொது விடுமுறையாகும்.

கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவலினை தெரிவித்தல் வேண்டும்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை பெற்று உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+