தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. உள்புகார் குழுக்கள் அமைப்பது எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க ஒவ்வொரு பள்ளியிலும் உள்புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த குழுக்களை பள்ளிகளில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அண்மைக்காலமாக பெண்கள், மாணவிகள், சிறுமிகள், உள்ளிட்டோருக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்களின் வசிப்பிடங்களில் நடப்பதை போல் இவர்கள் பணியாற்றும் இடம், படிக்கும் இடம் என எங்கும் பாலியல் தொல்லைகள் நிறைந்துள்ளன.

சென்னையில் பிரபல பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனை தடுக்க ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை தடுகக புகார் குழுக்களை அமைக்கப்பட வேண்டும் என 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

50 சதவீதம்

50 சதவீதம்

இந்த குழுவில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள் இருக்க வேண்டும், குழுவின் தலைவர் பெண்ணாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் பணியாற்றாத பெண்கள், சமூகஆர்வலர்கள் அந்த குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

குழுக்கள்

குழுக்கள்

ஆனால் இதுவரை அது போன்ற குழுக்கள் பெரும்பாலான பள்ளிகளில் அமைக்கப்படவில்லை. அது போல் சில பள்ளிகளில் பெயரளவுக்கு உருவாக்கப்பட்ட குழுக்களும் சரியாகவும் முறையாகவும் செயல்படுவதில்லை. இந்த அறிவிப்புக்கு பின்னர் கூட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நடவடிக்கை

நடவடிக்கை

ஒரு சம்பவம் நடக்கும் போது பேசிவிட்டு அத்துடன் அது தொடர்பான நடவடிக்கைகளை விட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் இந்த குழுவை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கூட இந்த குழு உருவாக்கம் குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

உள்புகார் குழுக்கள்

உள்புகார் குழுக்கள்

உள்புகார் குழுக்கள் ஒவ்வொரு பள்ளிகளிலும் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் இதுநாள் வரை அமைக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் உள்புகார் குழுக்கள் விரைந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+