சென்னையில் தொடங்கும் லூலூ மால் கட்டுமானம்.. எங்கே கட்டப்படுகிறது தெரியுமா? சூப்பர் தகவல்
சென்னை; சென்னையில் லூலூ மால் கட்டப்படும் இடம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்னும் 2 வாரங்களில் இங்கே கட்டுமானம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் கட்டுமானம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.

ஒப்பந்தம்: இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.
எங்கே வருகிறது; தமிழ்மட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
அடுத்த வருடம் இவர்களின் மால் சென்னையில் திறக்கப்பட உள்ளது. அதே சமயம் ஹைப்பர் மால் கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.
லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட மையத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கும். நிறுவனத்தில் இருந்து உயர்மட்டக் குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தந்து, இடங்கள் மற்றும் தொடர்புடைய ஆலோசனைகளை மேற்கொண்டு முதலீடு செய்யப்படும் இடத்தை இறுதி செய்யும்.
எங்கே மால் வருகிறது?: இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குதான் அந்த மால் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கே மிகப்பெரிய குடியிருப்பும் அமைக்கப்பட உள்ளது. அதன் அருகிலேயே லூலு மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications