என்ன தவம் செய்தாரோ தோனி.. இப்படியொரு ரசிகர்கள்.. பேர்ஃவெல்க்குரிய ஒத்திகையாக மாறும் போட்டிகள்
சென்னை: எம்.எஸ்.தோனி : ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திப் போகும் ஒருத்தரின் இறுதி கிரிக்கெட் கரியர் எத்தனை கரகோஷங்களோடும் ஆர்ப்பரிப்புடனும் கொண்டாடப்பட வேண்டுமோ அப்படியே கொண்டாடப்பட்டு வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
தோனிக்கு பிரியா விடை அளிக்க விரும்பும் ரசிகர்கள், அவரது ஆட்டத்தை கடைசியாக ஒரு முறையாவது பார்க்க விரும்பும் ரசிகர்களின் உணர்ச்சி குவியலைத்தான் காண முடிகிறது. தமிழனுக்கு என்றோர் குணம் உண்டு. தங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அவர்களே வேண்டாம் என்று நினைத்தாலும் தடுக்கவே முடியாது.

80களில் உலக கோப்பை வென்று தந்தார் கபில் தேவ்.. அவர் விதை போல் முளைத்து வந்தவர். எந்த பின்புலமும் இல்லாமல் மிக கடினமான வாழ்க்கை பாதையை கடந்து வந்தவர் கபில்தேவ். கிரிக்கெட்டில் மிக முக்கியம், யாருமே இல்லாவிட்டாலும் களத்தில் கேப்டன் நிலைத்து நின்று வெற்றியை தேடி தர வேண்டும். அப்படிப்பட்டவர் தான் கபில் தேவ். டீமில் யாரையும் வலிமையாளராக மாற்றும் வல்லமை உள்ளவர். தனியொருவராக ஒரு டீமின் தலையெழுத்தையே மாற்றக்கூடியவர். அதனால் தான் இந்தியா 1983ல் உலக கோப்பையை வாங்கியது.
கபில்தேவ் போல் ஒருவர் புதிதாக விதை போல் முளைத்து வர, இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது. அப்படி உருவானவர் தான் மகேந்திர சிங் தோனி. விக்கெட் கீப்பராக வந்த தோனி, இந்தியாவின் உலக கோப்பை கனவை சாத்தியமாக்கினார். சரியாக 28 வருடங்கள் கழித்து சாத்தியம் ஆனது. தனி மனிதாக அணியை தாங்குவதாகட்டும், ஆபத்தான நேரங்களில் டீமில் மற்ற உறுப்பினர்களை சரியாக வழிகாட்டி வெற்றியை ஈட்டுவதாகட்டும் தோனியின் கேப்டன்ஷிப் போல் ஒருவர் இனி உருவாகத்தான் வேண்டும். இப்போது வரை இல்லை.
சம காலத்தில் தோனியைப் போல் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வீரர்கள் யாருமே இல்லை. சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல, அதைவிடவும் அதிகமாக கொண்டாடப்பட்ட ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்றால் இது சந்தேகமே வேண்டாம் அது நிச்சயம் எம்எஸ் தோனி தான்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றுவிட்ட தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ரசிகர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தவம் இருக்கிறார்கள். தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்றே எல்லா ரசிகர்களும் நினைக்கிறார்கள். அதனால் எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து ஐயப்பன் என்பவர் தனது சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு பலரையும் எமோசனாலக்கி உள்ளது அவர் பதிவினை அப்படியே பார்ப்போம். "ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திப் போகும் ஒருத்தரின் இறுதி கிரிக்கெட் கரியர் எத்தனை கரகோஷங்களோடும் ஆர்ப்பரிப்புடனும் கொண்டாடப்பட வேண்டுமோ அப்படியே கொண்டாடப்பட்டு வருகிறது .
இந்த சீசனில் செல்லுமிடம் எல்லாம் மஞ்சளாக மாறி காட்சியளித்து கொண்டிருக்கும் மைதானங்கள் எல்லாம் அவரின் பேட்டிங் வருகைக்காகவே காத்து கொண்டிருக்கிறது அவர் ஆடும் அந்த இறுதி ஓவர்களின் ஆட்டம் அதிக மக்கள் பாக்கும் தொலைக்காட்சி/ஓடிடி சேனலாக தானாகவே மாறிவிடுகிறது.
மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு போட்டி தான் பேர்ஃவெல் போட்டியாக அமையும் ஆனால் தோனிக்கு இந்த சீசனில் ஆடும் ஓவ்வொரு போட்டிகளும் பேர்ஃவெல்க்குரிய ஒத்திகையோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவரை காணவே கூட்டம் மைதானங்களில் அலைமோதுகிறது.
தோனி அடித்த அந்த இறுதி பந்தின் சிக்ஸர் இன்னும் அந்த பழைய சடையன் அவருக்குள் உறுமிக் கொண்டு தான் இருக்கிறான் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. தோனி இஸ் Full of எமோஷன்" இவ்வாறு ஐயப்பன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications