குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி கேழ்வரகு கிடையாதா? டைம் வேற முடிய போகுதே.. ரேஷன் கடைகளில் ராகி பஞ்சம்?
சென்னை: நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகம் முழுவதுமே ரேஷனில் 2 கிலோ ராகி விரிவுப்படுத்த அரசு முயன்று வருகிறது.. எனினும் இது தொடர்பாக நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.. எனவே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவ துவங்கியிருக்கிறது.. என்ன காரணம்?
தமிழகத்தை பொறுத்தவரை, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் அட்டைதாரர்கள்
இதைத்தவிர, குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக சத்தான ஊட்டச்சத்தினைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு 2 கிலோ விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் கடந்த மே மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவையாக உள்ளது.. கேழ்வரகு விநியோகத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தினால் மாதம் 1,360 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.
ரேஷனில் அரிசி, கோதுமை, கேழ்வரகு
தற்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதுபோல, கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும். ஆனால், அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பில்லை. காரணம், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1-க்கு இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது" என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
அவகாசம் முடிகிறது
இந்நிலையில், கேழ்வரகு கொள்முதல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதாவது, தமிழக விவசாயிகளிடம், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு வழங்கிய அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
இதுவரை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 3,742 டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளதால், அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி இலவச கேழ்வரகு கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ரேஷனில் கேழ்வரகு இல்லையா
போதுமான அவகாசம் அளித்தும்கூட, நேற்று வரை, வெறும் 3,742 டன் கேழ்வரகு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாம்.. கடந்த சீசனிலும், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதில், வெறும் 1,889 டன் மட்டுமே கிடைத்தது. இந்த முறையும் அனுமதிக்கப்பட்ட அளவு கேழ்வரகு கொள்முதல் செய்யப்படவில்லை.
எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லையாம்.
விழிப்புணர்வு தேவை
இதனிடையே சில நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்,.,. அதாவது, கடந்த 2 வருடங்களாக அரசு சார்பில் கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவது பல விவசாயிகளுக்கு இன்னமும் தெரியாமலேயே உள்ளதாம்.. அதிலும், தனியார் நிறுவனங்களை விட, அரசு வழங்கும் விலை அதிகம் இருந்தபோதிலும், பலருக்கும் இது தெரியவில்லையாம்.
எனவே, வேளாண் அதிகாரிகள் இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கொள்முதல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது,.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications