சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியா இருங்க.. 1000 ரூபாய் வரப்போகுது.. எப்போ தெரியுமா.. கோவையில் உதயநிதி சொன்ன ஸ்வீட் நியூஸ்..!

1000 ரூபாய் எப்போது என்பது குறித்து உதயநிதி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் புது தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.. அதில் அனைவரையும் ஈர்த்தது, பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்பதான அறிவிப்புதான்.

உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்! உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!

இந்த அறிவிப்பு பற்றிய விவரம் எதையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை.. ஆனால், கடந்த 3 மாதங்களாகவே 1000 ரூபாய் அறிவிப்பை நோக்கி தமிழகம் காத்துள்ளது.. ஆனால், மக்களே பொறுமையாக இருந்தாலும் அதிமுக, இதை பிரச்சாரமாக்கி வருகிறது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

போலி வாக்குறுதிகள், பொய்யான அறிவிப்புகள் என்று திமுக அரசை விமர்சித்து வருகிறது.. இந்த சூழலில் கடந்த 13-ம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்... அப்போது, "பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம்... யாரையும் ஏமாற்ற மாட்டோம்" என்றும் உறுதி தந்திருந்தார்..

 1000 ரூபாய் நிச்சயம்

1000 ரூபாய் நிச்சயம்

சில தினங்களுக்கு முன்பு, சாத்தூர் பிரச்சாரத்தின்போது அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிக்கு மட்டும் தான் 1000 ரூபாய் வழங்கப்படும்.. குடும்பத்தலைவர் வந்து கேட்டால் வழங்கப்பட மாட்டாது... குடும்பத் தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் 2 மாதங்களில் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.. ஆனாலும், 1000 ரூபாய் எப்போது தரப்படும் என்பது குறித்த உறுதியான பதில்கள் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்து வருகிறது.

 1000 ரூபாய் எப்போது?

1000 ரூபாய் எப்போது?

அதற்கேற்றார்போல், உதயநிதி இந்த முறை எங்கு சென்றாலும் அவரிடம் பெண்களே நேரடியாகவே 1000 ரூபாய் எப்போது என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. உதயநிதியும் இதற்கு 4 நாட்களுக்குமுன்பு எதேச்சையாக பதிலளிக்க போய், எதிர்க்கட்சிகள் அதையும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.. அதனால், இப்போது உதயநிதி எங்கு போனாலும், பெண்கள் கேட்பதற்கு முன்பேயே 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து சொல்லி வருகிறார்.தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்றைய தினம் கோவைக்கு பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் உதயநிதி..

 1000 ரூபாய்

1000 ரூபாய்

கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், திமுக தரப்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்தனர்.. அப்போது உதயநிதி பேசும்போது, அதிமுக ஆட்சி முடிந்து செல்லும்போது கஜனாவில் 6 லட்சம் கோடி கடனை வைத்து சென்றனர்.. ஆனாலும் திமுக ஆட்சியமைந்தவுடன் பால் விலை குறைப்பு, இலவச பேருந்து பயணம் பெண்களுக்கு, என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1000 ரூபாய் எப்போது என்று கேட்பீர்கள்.. கண்டிப்பாக நிதிநிலை சரி செய்யப்பட்டு விரைவில் பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்.. தலைவர் சொன்னதை செய்வார்" என்றார்..

English summary
When will Rs 1000 be given to family heads and Udhayanidhi stalins coimbatore campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X