சின்ன வெங்காயம் உச்சிக்கு போயிடுச்சு.. சென்னை கோயம்பேட்டில் நிலைமை வேற!விஷயத்துக்கு வந்த விவசாயிகள்
சென்னை: சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், மிக முக்கிய கோரிக்கையை விவசாயிகள் மத்திய அரசுக்கு விடுத்து வருகிறார்கள். அது என்ன?
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது..

மத்திய அரசு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விதித்திருந்த நிலையில், சமீபத்தில் இந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கியிருந்தது. ஆனால் ஏற்றுமதிக்கு பெரிய வெங்காயத்தை போலவே, சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்து 40 சதவீதம் வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதனால் வெங்காய விலை எகிறி உள்ளது.
இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பல்லடம் விவசாயிகள் தங்கள் வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில், "பெரும்பாலும் விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதத்தில் விலை ஏற்றம் இருக்கும் என்று பலரும் ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தனர்.
இருப்பு: ஆனால் மத்திய அரசின் அறிவிப்பால், தாங்கள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் இப்போது ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுமார் 20 ரூபாய் விலை ஏற்றம் இருந்திருக்கும். வரி விதிப்பால் அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்கிறபோது, அதில் 30 சதவீதம் சதவீதம் கழிவுகள் ஏற்படும்... மிச்சமுள்ள 70 சதவீதம் வெங்காயம் மட்டுமே விலைக்கு விற்க முடியும்.
கழிவுகள்: ஆனால் கடந்த மாதங்களில் வெயிலும், இப்போது கோடை மழையும் பெய்து வருவதால், 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் அளவிற்கு கழிவுகள் ஏற்படும்... மீதமுள்ள 50 சதவீதத்தில் மட்டுமே சாகுபடி செலவு மற்றும் இவ்வளவு நாள் இருப்பு வைத்ததற்கான பலனை காண முடியும். எனினும் அப்படியொரு நிலைமை இப்போது காணப்படவில்லை.
மொத்தத்தில், 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு உடனடியாக சின்ன வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும்" என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications