சின்ன வெங்காயம் சர்ன்னு பறக்குது.. சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ எவ்ளோ? எப்போது விலை குறையும் தெரியுமா
சென்னை: கடந்த வாரம்வரை விலை குறைந்திருந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது திடீரென அதிகரித்து விட்டது. என்ன காரணம்?
விளைச்சல் அதிகரிப்பு மற்றும் வரத்து காரணமாக தொடர்ந்து வெங்காயம் விலை குறைந்து காணப்பட்டது.. சென்னையில் வெங்காயம் விலை 20 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால், இப்போது, மும்மடங்கு விலை உயர்ந்துவிட்டது..

ஏற்றுமதி: அரியலுார், பெரம்பலுார், திருச்சி, திருப்பூர், ஈரோடு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், சின்ன வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக, மலேஷியா, சிங்கப்பூர், துபாய், நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த டிசம்பரில், பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது... இதன்காரணமாக, சின்ன வெங்காயம் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.. எனவே, உள்ளூர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து உயர்ந்துவிட்டது..
சின்ன வெங்காயம்: சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ சின்ன வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது, வெங்காயம் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.. எனவே, சின்ன வெங்காயம் ஏற்றுமதி வேகமெடுத்து வருவதுடன் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
அந்தவகையில், கோயம்பேட்டில் 1 கிலோ சின்ன வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது... கோயம்பேட்டிலேயே 60 ரூபாய் என்பதால், இவற்றை வாங்கி செல்லும் வெளிமார்க்கெட் வியாபாரிகள், தங்களுக்கு ஏற்றார்போல் கூடுதல் விலையில் விற்பனை செய்து வருகின்றனர்... இதற்கெல்லாம் காரணம், வெங்காயம் அறுவடை முடிந்துவிட்டதாம்.. அத்துடன், கையிருப்பிலுள்ள வெங்காயமும் குறைந்துவிட்டதால், விலையும் அதிகரித்துவிட்டதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.
கோடைமழை: ஆக, ஏற்றுமதி காரணமாக வெங்காயம் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது.. எப்போதுமே சின்ன வெங்காயம் சீசனுக்கு ஏற்றபடி விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கம் என்றாலும், இப்போது வெயில் காலம் என்பதாலும், கோடைமழை இப்போதுதான் துவங்கியிருப்பதாலும், விவசாயிகள் சின்ன வெங்காயம் விதைப்பை ஆரம்பித்துள்ளனர்.
இது விளையும்வரை, பட்டறையில் சேமித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மட்டுமே, இன்னும் 2 மாதங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் சொல்கிறார்கள்.. ஏனென்றால், இப்போது நடவு செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம், விளைந்து விற்பனைக்கு வருவதற்கு எப்படியும் 70 நாட்களுக்கு மேல் ஆகுமாம். அதுவரை சின்ன வெங்காயம் விலை மேலும் உயரலாம் என்கிறார்கள்...!!!
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications