Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 ட்ரில்லியன் டாலர் எப்ப வரும்? அடித்துச் சொன்ன சுரேஷ் சம்பந்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டி உள்ளது தமிழ்நாடு அரசு.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்2024 மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. இது சாதாரண சாதனை இல்லை.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

முன்பு சென்னைதான் ஐடி நிறுவனங்களின் ஹப் ஆக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே கோவை ஐடி நிறுவனங்களின் ஹப் ஆக மாறி இருக்கிறது . சொல்லப்போனால் கோவையில் மட்டுமே 1 லட்சம் பேர் வேலைபார்க்கிறார்கள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் கோயம்புத்தூரில் சரவணம்பட்டி ஏற்கெனவே 60 பேர் பணி செய்து வருகிறார்கள்.

வரிசை கட்டி வரும் நிறுவனங்கள்:

இந்தத் தொழில்முனைவோ மாநாட்டில் கோவையில் 1000 கோடி முதலீட்டில் ஐடி நிறுவனம் வர உள்ளது. அதன்மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை நிச்சயமாகி உள்ளது.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் மட்டும் 50 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதைப்போல பெக்ட்ரான் ரூ.1000 கோடி முதலீட்டில் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் அமைக்க உள்ளது. அதன்மூலம் 8 ஆயிரம் பேர் வேலை பெற உள்ளனர்.

திண்டிவனத்தில் பார்மா பார்க் ஒன்றைக் கொண்டுவர உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பல நிறுவனங்கள் வர உள்ளன. அங்கே அமைய உள்ள ஒரு மருத்து தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீடு செய்ய உள்ளது. அமெரிக்கா வில் இருந்து அதற்காக நிதியை முதலீடு செய்ய உள்ளனர்.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

மிட்சுபிசி எலெக்ட்ரிக் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. அதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன்மூலம் வேலைவாய்ப்பு 50 பேருக்கு உருவாகும்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி மையத்தைக் கிருஷ்ணகிரியில் அமைக்கிறது. ஏறக்குறைய இதற்காக ரூ. 12,082 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன்மூலம் 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் குழுமம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளைத் திட்டமிட்டுள்ளது. அதற்காக ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. 500 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் ரு.6,180கோடி செலவில் காஞ்சிபுரத்தில் மின்சார காருக்கான மின்கலன்கள் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

இந்தப் பட்டில் வெறும் ட்ரெய்லர்தான். இதைவிடப் பெரிய பெரிய நிறுவனங்கள் கால்பதிக்க உள்ளனர் என்பதே உண்மை.

ஆகவே ஆண்டு தோறும் தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.

தமிழ்நாட்டை விரும்புவது ஏன்?:

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புவது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்தார் கிஸ் ஃபிளோ தலைமைச் செயலாளர் சுரேஷ் சம்பந்தம்.

"முதலில் அரசியல் சூழல் எப்படி உள்ளது என்று பார்ப்பார்கள். ஏனெனில் ஒரு அரசு நடைபெற்று வருகிறது. அது மாறி அடுத்த ஆட்சி வரும்போது ஏதேனும் நெருக்கடிகள் உருவாகுமா என்று யோசிப்பார்கள்.

அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தொடர்ச்சி இருக்கிறது. அதனால் பெரிய நெருக்கடிகள் வருவதில்லை. அது ஒரு சிறப்பம்சம் என்று சொல்லலாம்.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

அதற்கு அடுத்து சமூக அமைதி எப்படி உள்ளது. தொழில் தொடங்க உள்ள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி எப்படி இருக்கிறது என்பதைக் கட்டாயம் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்கா. அதில் நமக்கு மிகப்பெரிய நல்ல பெயர் உள்ளது.

மூன்றாவதாக, தொழிற்துறைக்கான நல்ல சூழல். கேரளா அல்லது மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தொழிலாளர்கள் போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் அதிகம் இருக்கும்.

தமிழ்நாட்டில் அப்படியான நிலை இல்லை. அதுவே அதிக தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விரும்புவதற்கான காரணங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

இதற்கு அடுத்து உட்கட்டமைப்பு. அதில் தமிழ்நாட்டுச் சிறப்பாக இருக்கிறது. போக்குவரத்து, சாலை வசதிகள், விமானநிலையம், துறைமுக வசதிகள், குடியிருப்பு வசதிகள், நல்ல மருத்துவ வசதிகள், நல்ல பள்ளிகள், தரமான கல்லூரிகள் எனச் சகலமும் சரியாக உள்ளது. இதில் தமிழ்நாடு மிகமிக வளர்ச்சி அடைந்துள்ளது.

இதில் தமிழ்நாடு ஓர் விசயத்தில் மட்டுமே பின்தங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நைட் லைஃப் கல்ச்சர் குறைவாக உள்ளது. அதாவது இரவு நேரப் பொழுதுபோக்குகள் மிகக் குறைவாக உள்ளது.

அதனால்தான் பலர் பெங்களூருக்குச் செல்கிறார்கள். மற்றபடி மற்ற அனைத்திலும் தமிழ்நாட்டு இந்திய அளவில் நம்பர் 1 மாநிலமாகவே உள்ளது" என்கிறார்

தமிழ்நாட்டில் 14% வளர்ச்சி:

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

தொடர்ந்து பேசிய சுரேஷ் சம்பந்தம், "கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் 14% வளர்ச்சி அடைந்துள்ளோம். சிலர் 8% என்று சொல்லி வருகிறார்கள். அது சரியானதல்ல; அது பழைய புள்ளிவிவரம்.

புதிய புள்ளிவிவரத்தின்படி 14% வளர்ச்சி அடைந்துள்ளோம். நாம் 18% வளர்ச்சியை எட்டிப் பிடித்தாக வேண்டி இருக்கிறது. அப்போதுதான் 1 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை நாம் அடைய முடியும். அதற்கு இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிக முக்கியமானது.

நாம் 1 ட்ரிலியன் வளர்ச்சியை அடைய இந்த ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு போதாது. வருகின்ற 3 ஆண்டுகளில் தொடர்ந்து ஆண்டுக்கு ஒன்று என்ற அளவில் வரிசையாக நடத்த வேண்டும்.

முதலில் நமது மாநிலம் Ease of doing business என்பதில் 14வது இடத்திலிருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன தெரியுமா? நினைத்தே பார்க்க முடியாத வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். 14 இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். இது அசுர வளர்ச்சி மட்டுமல்ல; அதிக வளர்ச்சியும் கூட.

When will Tamil Nadu complete 1 trillion dollar economy

அதேமாதிரி Export promotion index என்று நிதி ஆயோக் புதியதாக அறிமுகம் செய்துள்ளார்கள். இதன்படி குஜராத் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வளர்ச்சியை நாம் கடந்த 2 ஆண்டுகளில் அடைந்துள்ளோம். இப்படி பலதுறைகளில் தமிழ்நாடு முன்னேறி உள்ளது. மிகச்சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

ஆகவே நம்மால் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்கை அடைய முடியும். 2023இல் ஒருவேளை முடியாமல் போனால், 2032இல் அந்த வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டிப் பிடித்துவிடும்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+