"பச்சை சிக்னல்".. WAIT & SEE.. அதிமுக முடிவுக்காகவே காத்திருக்கிறேன்.. போட்டு உடைத்த டிடிவி தினகரன்
அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவுக்காக தினகரன் காத்திருக்கிறாராம்
சென்னை: அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவுக்காக தான் காத்துக்கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது, பெரும் எதிர்ப்பார்ப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
அதேபோல, பெரியகுளத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடந்து முடிந்த நிலையில் அதிமுகவில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றி கொண்டுள்ளது.

சசிகலா
தேர்தல் தோல்வி காரணமாக சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்த டென்ஷன் மேலும் எகிறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் தோல்விக்கு பிளவு தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைத்து, அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் ஓபிஎஸிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

தொண்டர்கள்
கிட்டத்தட்ட தொண்டர்களின் மனநிலைமையும் இதுபோலவே உள்ளது.. பெரும்பாலான மாஜிக்கள், நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் இதுபோலவே உள்ளது.. சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு கூட்டம் வெளிப்படையாகவே சொல்லி வருகிறது.. சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டால்தான் கட்சி பலப்படும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், மீண்டும் சசிகலாவை சேர்க்கக்கூடாது, அதிமுகவுக்கு ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமியே இருக்கவேண்டுமென்று தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உட்பட பல்வேறு தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமமுக டிடிவி
இப்படிப்பட்ட சூழலில்தான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறேன்.. அது வந்த பிறகுதான், எனது முடிவை அமமுக தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன்.

தீய சக்தி திமுக
அமமுகவின் தொண்டர்களே எஜமானர்கள். என்னால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. நாங்கள் தவறு செய்யவில்லை... அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதுதான் அமமுகவின் லட்சியம்... சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் அதிமுகவினர் தான் உள்ளனர். அதன் விளைவாகத் தான் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்... திமுக என்ற தீய சக்தியை எதிர்த்துப் போரிட நான் முழுமூச்சுடன் போராடுவேன்'' என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications