கருவாடு மீனாகுதே.. "ஏங்க, சும்மா இருங்க".. அந்தம்மா இருந்தப்போ.. பாஜக போட்ட போடு.. அதிர்ந்த எடப்பாடி
அதிமுக மீதான கோபமும், அதிருப்தியும் தமிழக பாஜக தரப்பில் இன்னமும் தொடர்வதாக தெரிகிறது
சென்னை: அதிமுக - பாஜக இடையேயான மோதல் போக்கு சற்று குறைந்துள்ள நிலையில், இரு தரப்பிலுமே விவகாரங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தநிலையில், இரு தரப்புமே அமைதி காத்து வருகின்றனர்.. ஆனாலும், சில சலசலப்புகள் இன்னமும் ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.. அது நேற்றைய தினமும் அப்பட்டமாகவே வெளிப்பட செய்தது.
கடந்த சில தினங்களாகவே, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன.. அதேபோல, அதிமுக தரப்பில் இருந்தும் எதிர்வினையாற்றப்பட்டது.
மற்றொருபக்கம், அதிருப்தியாளர்கள் தொடர்ந்து பாஜகவில் இருந்து அதிமுக நோக்கி கிளம்பி சென்றனர்.. இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்தும் இருந்தனர்..

கடிவாளம்
ஆனால், நேற்றுமுன்தினம் ஒரே நாளில் எல்லாவிதமான பிணக்குகளுக்கும் ஒரு முடிவுகட்டப்பட்டுவிட்டது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களே, குறிப்பாக கொங்கு மண்டலத்தின் அதிமுக - பாஜக சீனியர்களே ஒன்றாக கூடிபேசி, நடந்து வந்த சலசலப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தெரிகிறது.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிர்வாகிகளிடம் பேசும்போது, "பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி தரவேண்டாம், அதனால், அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்சனை வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கடிவாளம் போட்டிருந்தார்.

நெருடல்கள்
அதுபோலவே, மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபி முனுசாமி போன்றோரும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் இரு தரப்பிலுமே நிலவிவந்த நெருடல்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனாலும் இவையாவுமே ஒரு தற்காலிக கடிவாளம் போலவே தெரிகிறது.. காரணம் நேற்றைய தினம் தமிழக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மீதான கோபமும், காட்டமும் தலைவர்களின் பேச்சில் நிறையவே தென்பட்டது..

மூக்கை துளைத்தது
ஆர்ப்பாட்டம் நடந்தது என்னவோ, திமுக அரசை கண்டித்துதான்.. ஆனால், தலைவர்கள் திட்டி தீர்த்தது பெரும்பாலும் கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியைதான். வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.. இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இதில் வழக்கம்போல் திமுக அரசை பாஜக விமர்சித்தாலும்கூட, அதிமுக மீதான "காட்டநெடி" அதிகமாகவே மூக்கை துளைத்தது எனலாம்.

தியாகராஜன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக துணைத்தலைவர் கராத்தே தியாகராஜன், "அந்தம்மா இருந்தவரை ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் எதாவது பேசினார்களா? வாய் திறந்தார்களா? இல்லை... ஆனால் நாங்கள் தைரியமாக அந்தம்மாவையே எதிர்த்து பேசிவிட்டு வெளியே வந்தோம். சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரை ஏன், அம்மா தூக்கினார்கள் என்பதையெல்லாம் இவங்க கொஞ்சம் யோசிக்கணும்.. அண்ணாமலை யாருக்கும் அடங்காதவர்.. அவரை அடக்க நினைத்தால், இவங்க எல்லாரும்தான் அடங்கி போவாங்க.. அதனால் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் போன்றவர்கள் வாயை அடக்கி பேச வேண்டும்" என்றார்

ம்ஹூம் நோசான்ஸ்
அவரைத் தொடர்ந்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி, "2026-ல் பாஜக தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும், அண்ணாமலை நிச்சயம் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள்... எங்கள் தலைமையை அல்லது எங்கள் தலைவரை விமர்சித்தால் அது யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தக்கப்பதிலடி கொடுப்போம்" என்றார். மத்திய சென்னை மாவட்டத்தலைவர் விஜய் ஆனந்த் பேசும்போது, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி பாஜகதான்... அதில் மாற்றமே கிடையாது.. எடப்பாடி பழனிசாமியெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றார்.

க்ரீன்சிக்னல்
ஆக, வள்ளுவர் கோட்டத்தில், திமுகவுடன் சேர்த்து அதிமுகவையும் பாஜக தரப்பு டேமேஜ் செய்ததாகவே கருதப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்ல, பாஜகவின் மாநில தலைவருக்காகத்தான், திமுகவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமே நடத்தப்பட்டது.. ஆனால், கூட்டணியில் உள்ள அதிமுக தரப்பில் யாருமே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நேரில் வரவுமில்லை.. ஆதரவும் தரவில்லை என்பதும் பேசுபொருளாகி உள்ளது.. அதற்கேற்றவாறு, நேற்றைய தினம் நட்டாவிடம் செய்தியாளர்கள் அதிமுகவுடன் உங்கள் கூட்டணி தொடர்கிறதா? என்ற கேள்வி எழுப்பினார்கள்.. ஆனால், நட்டா அதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார்..

சூழும் மேகங்கள்
"கூட்டணி தொடரும்" என்று எடப்பாடி பழனிசாமி முதல் வானதி சீனிவாசன் வரை கடந்த 2 நாட்களாக சொல்லி வரும்நிலையில், அந்த நிலைப்பாடு திட்டவட்டமானது என்றால், அதை நட்டா தாராளமாக வெளிப்படுத்தியிருக்கலாமே? ஏன் பதிலளிக்கவில்லை? என்ற சந்தேகமும் மறுபுறம் கிளம்பி உள்ளது. ஒருவேளை, டெல்லி மேலிடம் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதைபோலவே இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் பார்க்கப்பட்டும் வருகிறது.. வரும் தேர்தலில், திமுகவை ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும் என்று இரு தரப்பிலுமே விடாமல் சொல்லப்பட்டு வரும்நிலையில், இரு கட்சிகளிடம் அதிருப்தி மேகங்கள் இன்னமும் சூழ்ந்துள்ளதாகவே தெரிகிறது.. ஆக, மறுபடியும் "வெள்ளைக்கொடி"க்கு வேலை வரப்போகிறது போல.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications