"சம்மட்டி அடி".. திமிறி எழுந்த பன்னீர்.. ஓபிஎஸ்ஸூக்கு உதவும் "லீடர்" இவராமே.. ம்ஹூம் அசரலயே எடப்பாடி
சென்னை: பல்வேறு பரபரப்புக்கு நடுவில், திருச்சி மாநாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வரும்நிலையில், இன்னொரு முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது..!!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டரீதியான அடுத்தக்கட்டத்துக்கும் ஓபிஎஸ் தயாராகிவிட்டதாகவே சொல்கிறார்கள்..

கர்நாடகத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது..
செம சான்ஸ்: அதேசமயம், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.. அதனால், சென்னை ஹைகோர்ட் மற்றும் டெல்லி ஹைகோர்ட்டில் உள்ள வழக்குகளை மேற்கோள் காட்டி, கொடி, சின்னம், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவார் என தெரிகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகும், சசிகலா அதிமுக, சின்னம், கொடி போன்றவற்றைப் பயன்படுத்தவில்லையா? அதுபோலத்தான் வழக்குகளை மேற்கோள் காட்டி ஓபிஎஸ் சமாளிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

அதேபோல 2வது அதிரடியையும் கிளப்பி உள்ளார் ஓபிஎஸ்.. 24ம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாட்டை நடத்துகிறார் ஓபிஎஸ்.. தன்னுடைய நகர்வில் புதிய அத்தியாயம் என்று கருதும் இந்த திருச்சி மாநாட்டுக்கும் சிக்கலை உண்டுபண்ண எடப்பாடி தரப்பு முயன்று கொண்டிருக்கிறது.. காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போதே எச்சரிக்க துவங்கிவிட்டனர்.
திருச்சி மாநாடு: மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் தொடர்ந்து வார்னிங் தரப்பட்டு வருகிறது. ஆனாலும், திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி நிறைய பறக்க வேண்டும் என்று அதிரடியாக ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம்... அதன்படி, மாநாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா கட் அவுட்கள் வைக்கப்படும் என்று தெரிகிறது.. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே போஸ்டர் விளம்பரங்களில் பயம்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இந்நிலையில், 3வது அதிரடியையும் கிளப்பி உள்ளார் ஓபிஎஸ்.. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையிலும்கூட, எப்போதும் போலவே, "ஒருங்கிணைப்பாளர் " என்றே தன்னுடைய லெட்டர்பேடில் ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கையை வெளியிடுகிறாராம்.. இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: பண்ருட்டியாரை தன்பக்கம் கொண்டுவந்ததில் இருந்தே ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகமெடுத்து வருகிறது. இத்தனை காலமும், மேலிட பாஜகவுக்கு விசுவாசமாகவே இருந்துவந்த நிலையில், அதற்கான போதிய பலனை ஓபிஎஸ் இதுவரை பெறவில்லை.. இதை சசிகலா மற்றும் தினகரனிடம் தனிப்பட்ட முறையில் போனிலேயே சொல்லி வருத்தப்பட்டாராம் ஓபிஎஸ்.. ஒவ்வொரு நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதமாக வரும்போதெல்லாம், "ரொம்ப நம்பனேன்..ம்மா, ஆனால், என்னை கைவிட்டுட்டாங்க" என்று புலம்பி தீர்த்து வருவதாக செய்திகள் கசிந்தன.
இதற்கு பிறகுதான் பண்ருட்டியார், புது ரூட்டை கையில் எடுத்தார்.. செய்தியாளர்களிடம் பேசும்போதெல்லாம், "மக்களிடம் செல்வோம், மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்போம் என்று விடாமல் சொல்லி வருகிறார். அதன்படிதான், ஓபிஎஸ் தரப்பில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், முன்னெடுக்கப்பட்டு, இப்போது திருச்சி மாநாடு வரை வந்துள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில்தான், தற்போதைய நீதிமன்ற விவகாரத்திலும், ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாகி கொண்டிருக்கிறார் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்..
ஒருங்கிணைப்பாளர்: அதன்படியே, இப்போதுவரை "ஒருங்கிணைப்பாளர்" என்றே லெட்டர்பேடில் ஓபிஎஸ் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறாராம்.. "அதிமுக பெயரையும், பதவியையும் பயன்படுத்துவதை எதிர்த்து எடப்பாடி தரப்பில் நீதிமன்றம் செல்லட்டும்... அதுதொடர்பாக நீதிமன்றத்தில் மோதுவோம்... வழக்கின் இறுதி முடிவு தெரியும் வரையில் அதிமுகவிலிருந்து உங்களை அந்நியப்படுத்திட முடியாது" என்று ஓபிஎஸ்ஸூக்கு இப்படி ஒரு ஐடியாவை தந்ததே பண்ருட்டியார்தானாம்.. ஆக மொத்தம், இந்த பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.. என்ன தான் நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications