கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை
சென்னை: சென்னை வண்டலூர் அருகே கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடந்தாலும், இன்னும் திறக்கப்படவில்லை.. கிளாம்பாக்கம் பஸ்-ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி முடிந்தால் மட்டுமே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதனால் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி எப்போது முடியும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகளுக்காக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையம், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இங்கிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உளபட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மிக அருகில் தான் ரயில் பாதை போகிறது. வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் நடுவில் தான் கிளாம்பாக்கம் வருகிறது. அங்கு ரயில் நிலையம் அமைத்தால், சென்னை மக்கள் எளிதாக கிளாம்பாக்கம் அடைய முடியும் என்கிற நிலை இருந்தது.ஆனால் பேருந்து நிலையம் கட்டும் போதே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை.. ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வெகுதூரம் நடந்து சென்றோ அல்லது ஆட்டோ மூலம் பயணித்தோ பஸ் நிலையத்தை அடைய வேண்டிய நிலையே இப்போது வரை இருக்கிறது. சிலர் தாம்பரம் ரயில்நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் கிளாம்பாக்கத்துக்கு பயணித்து வருகிறார்கள.
இதற்கு தீர்வு காணும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இரண்டு ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் ஜனவரியி முடிவடையும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் முடிவடையவில்லை.
ஆகாய நடைபாதையை அமைக்கப்படாமல், ரயில் நிலையத்தை திறப்பதில் பயனும் இல்லை என்று கருதிய தெற்கு ரயில், புதிய ரயில் நிலையத்தை இன்னும் திறக்கவில்லை. தற்போது கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. நடைமேடைகள் அமைக்கப்பட்டு விட்டன.ஓரளவு பணிகள் முடிந்துவிட்டது. ஆகாய நடைபாதை பணிகள் முடிவடைந்தால் எஞ்சிய ரயில் நிலைய பணிகள் முடிக்கப்பட்டு ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்து, புதிய அரசு பொறுப்பேற்று 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஆகாய நடைபாதையை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆகாய நடைபாதை அமைக்க கொண்டு வரப்பட்ட தூண்கள் அப்படியே சாலையில் இருக்கிறது.. அரசு பேருந்துகளில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பயணிகள் தங்கள் உடைமைகளுடன் செல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
எனவே முதல்வர் விஜய், ஆகாய நடைபாதை பணிகளை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆகாய நடைபாதை பயன்பாட்டுக்கு வந்தால் ரயில் நிலையமும் திறக்கப்படும். பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்














Click it and Unblock the Notifications