Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அகவிலைப்படி அறிவிப்பு.. வெளியான தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அக்கவிலைபடி குறித்த அறிவிப்பு இந்நேரம் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொதுவாக மத்திய அரசு எவ்வளவு அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே அளவிற்குத்தான் தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது.

இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ.360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

bonus dearness allowance

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.

இதை பின்பற்ற வேண்டாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஏற்கனவே அரசு மீது அப்செட்டில் இருக்கின்றனர். கடந்த 2-3 தேர்தல்களாக அரசு ஊழியர்கள் ஆளும் திமுக பக்கமும் நிற்கவில்லை. அரசு ஊழியர்கள் சம்பளம் குறைவாக இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் அகவிலைப்படியில் வெறும் 2%ஐ உயர்த்தினால் அது அரசு ஊழியர்களை மேலும் அப்செட்டாக்கும். இதனால் அரசு ஊழியர்கள் மனம் குளிரும் விதமாக அவர்களின் சம்பளத்தை கூடுதலாக உயர்த்தும் வகையில் அகவிலைப்படி சதவிகிதம் கூடுதலாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு வரும்?

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) எவ்வளவு வழங்கப்படுகிறதோ பொதுவாக அதே தொகைதான் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விட மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் குறைவு. இந்த சம்பளம் மேலும் குறையாமல் இருக்க.. அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்படும். அதாவது அவர்களுக்கு 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டால் மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவு உயர்த்தப்படும். கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு அரசின் திட்டம் என்ன?

ஆனால் இதில்தான் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான பார்முலா ஒன்றை உடைக்க உள்ளாராம். அதாவது பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விட மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் குறைவு. இந்த சம்பளம் மேலும் குறையாமல் இருக்க.. அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்படும். அதை ஸ்டாலின் உடைக்க உள்ளாராம்.

இந்த முறை 2%க்கு பதில் கூடுதலாக அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்கிறார்கள். அதாவது மத்திய அரசின் பார்முலாவை பயன்படுத்தாமல்.. அவர்களின் பிட்மென்ட் காரணியை பயன்படுத்தாமல் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+